Breaking News LIVE: இஸ்ரோ விஞ்ஞானி ராம் நரேன் காலமானார்
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
Breaking News LIVE: இஸ்ரோ விஞ்ஞானி ராம் நரேன் காலமானார். இவர், மறைந்த குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமோடு பணியாற்றியிருக்கிறார். அக்னி வரிசை ஏவுகணையில் , மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் வரவேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் ஆளுநருக்கு புத்தகம் பரிசளித்தார்.
Breaking News LIVE: 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஹாரன் ஒலி அடித்ததால் இயக்குநர் சேரன் ஆத்திரம். நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம்! இச்சம்பவத்தையடுத்து, கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ₹10,000 அபராதம் விதித்தனர் போலீசார்.
பயணிகளுடன் வந்த பேருந்தை இயக்குநர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு என்றும், காவல்துறையிடம் புகார் அளிக்காமல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடலூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை போலீஸிடம் ஒப்படைத்து, சேரன் மீது புகார் அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோருக்கு மாணவர்கள் எழுதிய கடிதத்தால் மது, புகைப்பழக்கத்தை விட்டொழித்த 15 பெற்றோர்கள்; சுதந்திர தினத்தை ஒட்டி விருந்தினராக அழைத்து கவுரவித்த பள்ளி நிர்வாகம்! கடிதத்தில் குழந்தைகள் அடைந்துள்ள மன வேதனையைப் பார்த்த பிறகு இம்முடிவை எடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.
Breaking News LIVE: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சார்பில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும், அமைச்சர்கள் துரைமுருகன் , பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில், சந்தோஷ் என்ற வளர்ப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாடினர் வனத்துறையினர்
தேனியில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது. 2 கார்கள் பறிமுதல். போலீசார் நடவடிக்கை.
தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"வெறும் ₹1,000 ஒதுக்கியிருக்காங்க.. டீ, காபி வாங்கி சாப்பிடவா?" தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி சாடல்
திருச்சியில் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘தங்கலான்’ படத்தை காண ‘தங்கலான்’ கெட்டப்பில் வந்த ரசிகர்கள் சட்டை அணிந்து உள்ளே வரும்படி திரையரங்க நிர்வாகிகள் அறிவுறுத்தியதையடுத்து சட்டை அணிந்து உள்ளே சென்றனர்
நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘விடாமுயற்சி’ படக்குழு!
“கலைஞரின் மகனிடம் தகைசால் விருது பெற்றதை, தந்தையும் மகனும் எனக்கு அளித்த பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தகைசால் தமிழர் விருதை பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலக யாரும் அழுத்தம் தரவில்லை – குஷ்பு
"ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்" -அமைச்சர் தங்கம் தென்னரசு
78வது சுதந்திர தின விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவிப்பு!
'The Notebook' star Gena Rowlands passes away at 94: பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனா ரவ்லாண்ட்ஸ், தனது 94 வயதில் காலமானார்
ஓய்வூதியம் ₹20,000ல் இருந்து 21,000ஆக உயர்த்தி வழங்கப்படும்" -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
"முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்; இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
“2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
78வது சுதந்திர தின விழா - சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
78வது சுதந்திர தின விழா - சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
"இந்தியாவை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காகப் பலர் உழைத்து வருகின்றனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள்தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டுக்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்திய நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கும் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும். உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும். இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்" - 78வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை
சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் வருகை!
தமிழ்நாடு முழுவதும் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
- நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுகிறார்
- சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றுகிறார்.
- 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதரபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு நடக்கிறது,
- சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
- செவிலியர் சபீனாவுக்கு வீர தீர சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருது வழங்குகிறது தமிழ்நாடு அரசு
- பிரதமர் மோடி அரசு சமூகநீதிக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது – குடியரசுத் தலைவர் முர்மு
- பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – ரசிகர்கள் அதிர்ச்சி
- பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி- கொல்கத்தாவில் பதற்றம்
- பயிற்சி மருத்துவர் கொலையை மூடி மறைக்க மேற்கு வங்க அரசு முயற்சி – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
- பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளியை தூக்கில் இடுவதில் உறுதி – முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்
- தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி குறைப்பு – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
- தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் – சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -