Breaking News LIVE: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 19 Jan 2024 08:01 PM
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசி வருகின்றார். தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கியதாக கூறப்படுகின்றது. 

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல் நடைபெற்று வருகின்றது. 

Breaking News LIVE: முடிந்தது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா

மிகவும் பிரமாண்டமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மிகவும் கோலகலமாக நடந்து முடிந்தது. 

Breaking News LIVE: பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளால் கலை கட்டும் கேலோ இந்தியா தொடக்கவிழா

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளினால் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளினால் கலைகட்டியுள்ளது. 

Breaking News LIVE: நம்மால் தகர்க்க முடியாத சாதனைகள் எதுவும் இல்லை - பிரதமர்

நம்மால் தகர்க்க முடியாத சாதனைகள் என எதுவும் இல்லை என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Breaking News LIVE: கேலோ இந்தியா பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம்

கேலோ இந்தியா பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தனது குழுவினருடன் நடனம் ஆடினார். 

Breaking News LIVE: இந்தியாவில் விளையாட்டுத்துறை ஒரு பெரும் பொருளாதாரம் - பிரதமர்

இந்தியாவில் விளையாட்டுத்துறை ஒரு பெரும் பொருளாதாரம் நிறைந்ததாக உள்ளது. இந்தியாவில் விளையாட்டுத்துறை மூலம் ஒரு லட்சம் கோடி மதிப்பிருக்கும் - பிரதமர் மோடி

Breaking News LIVE: மகளிர் சக்தியின் அடையாளம் - பிரதமர்

மகளிர் சக்தியின் அடையாளமாக வேலுநாச்சியார் விளங்குகின்றார் - பிரதமர்

Breaking News LIVE: புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் - பிரதமர்

புதியக் கல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. - பிரதமர் மோடி 

Breaking News: இந்தியா சாதனை - பிரதமர்

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெரும் சாதனை படைத்துள்ளது. விளையாட்டு போட்டிகளை நாம் இளைஞர்களிடம் கொண்டு செல்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. 

Breaking News: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சிலம்பம்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சிலம்பத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், திருக்குறள், வேலுநாச்சியரை தனது உரையில் சுட்டிக்காட்டினார் பிரதமர் மோடி. சிறந்த பாரம்பரியமான சிலம்பம் போட்டியை காண ஆர்வமாக உள்ளேன் என்றார் பிரதமர். 

Breaking News LIVE: சாம்பியன்களை உருவாக்கும் தமிழ்நாடு

சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு என பிரதமர் மோடி தனது உரையில் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக கலாசாரம் உங்கள் வீட்டில் உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தும். விளையாட்டில் தமிழகத்திற்கு என்ற இடம் ஒன்று உள்ளது. பாரதத்தை விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக மாற்ற விரும்புகிறேன். 

Breaking News LIVE: இளைய இந்தியாவே புதிய இந்தியா

இளைய இந்தியாவே புதிய இந்தியா என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Breaking News LIVE: தமிழில் உரையைத் தொடங்கிய மோடி

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி வணக்கம் சென்னை என தமிழில் பேசி தனது உரையையை தொடங்கியுள்ளார். 

Breaking News LIVE: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் 6வது எடிசனை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 

Breaking News LIVE: 12 புதிய பண்பலை வானொலி ஒலிபரப்பு கோபுரங்கள் தொடங்கி வைப்பு

12 புதிய பண்பலை கோபுரங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

Breaking News LIVE: புதிய வண்ணங்கள் புதிய எண்ணங்கள் - டிடி தமிழ் சேனல் தொடங்கி வைப்பு

டிடி தமிழ் ஹெச்டி சேனலை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதில் புதிய வண்ணங்கள் புதிய எண்ணங்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 

Breaking News LIVE: தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகள் - முதலமைச்சர்

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட், ஸ்குவாஷ் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளை தமிழ்நாடு நடத்தியுள்ளது. 

Breaking News LIVE: கேலோ இந்தியா தமிழ்நாட்டில் நடப்பது மகிழ்ச்சி

கேலோ இந்தியா தமிழ்நாட்டில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது - முதலமைச்சர் ஸ்டாலின் 

Breaking News LIVE: எல்லோருக்கும் எல்லாம் என்பதே நோக்கம்

எல்லோருக்கும் எல்லாம் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் 

Breaking News LIVE: 2030இல் இந்தியாவில் ஒலிம்பிக்

2030ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த பிரதமர் மோடி முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார். 

Breaking News LIVE: டிடி தமிழ் ஹெச்.டி

தூர்தர்ஷன் பிராந்திய சேனல்களில் டிடி தமிழ் தான் முதல் ஹெச்.டி சேனல் - மத்திய அமைச்சர் அனுராக்

Breaking News LIVE: கேலோ இந்தியா போட்டிகள் அடித்தளம்

ஆசிய போட்டிகள் தொடங்கி ஒலிம்பிக் போட்டிகள் வரை இந்தியா சாதனை புரிய கேலோ இந்தியா போட்டிகள்தான் முக்கியக்காரணம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசி வருகின்றார். 

Breaking News LIVE: தமிழில் உரையைத் தொடங்கிய மத்திய அமைச்சர்

கேலோ இந்தியா தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வணக்கம் சென்னை எனக்கூறி தமிழில் உரையைத் தொடங்கினார். 

Breaking News LIVE: பாடல் நிகழ்ச்சிகள்

கேலோ விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் கலைகட்டி வருகின்றது. 

Breaking News LIVE: இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் தமிழ்நாடு - கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி தொடக்கவிழாவில் உதயநிதி

விளையாட்டுத்துறையில் இந்திய ஒன்றியத்திற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது  - அமைச்சர் உதயநிதி

Breaking News LIVE: நலிவடைந்த வீரர்களை ஊக்கப்படுத்தும் அரசு - அமைச்சர் உதயநிதி

பொருளாதாரா ரீதியாக நலிவடைந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகின்றது - அமைச்சர் உதயநிதி.  

Breaking News LIVE: நமது கனவு நனவாகி தருணம்

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தும் தருணத்தில் நாம் இருக்கின்றோம் கனவு நனவாகிய தருணம் என அமைச்சர் உதயநிதி பேசிவருகின்றார். 

Breaking News LIVE: வரவேற்புரை அளித்த அமைச்சர் உதயநிதி

கேலோ இந்தியா போட்டிகள் தொடக்கவிழாவில் அமைச்சர் உதயநிதி வரவேற்புரை வழங்கி வருகின்றார். 

Breaking News LIVE: நினைவுப் பரிசுகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி

விழா மேடையில் இருந்த தலைவர்களுக்கு ஆளுநர் உட்பட அனைவருக்கும் நினைவுப்பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

Breaking News LIVE: பிரதமருக்கு நினைவுப் பரிசு

பிரதமருக்கு வேலு நாச்சியார் சிலையை நினைவுப் பரிசாக பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 

Breaking News LIVE: தேசிய கீதத்துடன் தொடங்கிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா

தேசிய கீதத்துடன் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. 

Breaking News LIVE: விழா மேடையில் தலைவர்கள்

விழா மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உள்ளனர். 

Breaking News LIVE: விழா மேடைக்கு வந்தார் பிரதமர்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க பிரதமர் மோடி விழா மேடைக்கு வந்தார். 

Breaking News LIVE: சற்று நேரத்தில்

சற்று நேரத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார். 

Breaking News LIVE: முதல் முறையாக தென்னிந்தியாவில் நடத்தப்படும் கேலோ விளையாட்டுகள்

தென்னிந்தியாவில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனை தமிழ்நாடு நடத்துகின்றது. 

Breaking News LIVE: நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வந்தார் பிரதமர்

உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். 

Breaking News LIVE: பிரதமரை வரவேற்க ஏ.சி. சண்முகத்திற்கு அனுமதி மறுப்பு

பிரதமரை வரவேற்க புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்த ஆளுநர், முதலமைச்சர்

நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்துள்ளனர். 

Breaking News LIVE: இருபுறமும் கட்சியினர் வரவேற்பு

பிரதமர் மோடிக்கு சிவானந்தா சாலை முதல் பல்லவன் சாலை வரை பாஜகவினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகின்றது. 

Breaking News LIVE: நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்ட பிரதமர்

ஐஎன்எஸ் அடையாற்றில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் வழி நெடுகிழும் மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: பிரதமரை வரவேற்க ஐ.என்.எஸ் அடையாறுக்கு வந்த முதலமைச்சர்

பிரதமரை வரவேற்க ஐஎன்எஸ் அடையாறுக்கு வந்தார் முதலமைச்சர். முதலமைச்சருக்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. 

Breaking News LIVE: ஐ.என்.எஸ் அடையாற்றில் இருந்து கார்

ஐ.என்.எஸ் அடையாற்றில் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு காரில் பிரதமர் மோடி புறப்படவுள்ளார். 

Breaking News LIVE: விமான நிலையத்தில் இருந்து ஐ.என்.எஸ் அடையாருக்கு புறப்பட்டார் பிரதமர்

விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்ட்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. 

Breaking News LIVE: 5 அடுக்கு பாதுகாப்பில் சென்னை

பிரதமர் மோடி வருகையால் தலைநகர் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தயாரான சென்னை

பிரதமரை வரவேற்க தலைநகர் சென்னை தயாரானது. அந்த காட்சிகள், 





Breaking News LIVE: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விமான நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராக உள்ளனர். 

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்குச் செல்லவுள்ளார். 

Breaking News LIVE: பிரதமரை வரவேற்க விமான நிலையத்தில் குவியும் முக்கிய பிரமுகர்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் சென்னைக்கு வரவுள்ளதால் அவரை வரவேற்க முதலமைச்சர், அமைச்சர்களுடன் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசனுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். ராஜாவும் வந்துள்ளர். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமரை வரவேற்க விமானநிலையத்தில் உள்ளார். 

Breaking News LIVE: சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ்

சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Breaking News LIVE: பல் பிடுங்கிய விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சம்மன்

நெல்லையில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மார்ச் 1ஆம் தேதி தமிழக டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Breaking News LIVE: போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை

போக்குவரத்து தொழிற்சங்கத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Coaching Centres : பயிற்சி மையங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு

Coaching Centres : 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களைப் பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது. அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, பயிற்சி மையங்களுக்கு அரசு விதித்துள்ளது.

Gayathri Raghuram Joins ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்.

Gayathri Raghuram Joins ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம். நடிகரும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், இதற்கு முன்னர் பாஜக கலைப்பிரிவில் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Bilkis Bano Case : பில்கிஸ் பனோ வழக்கு : குற்றவாளிகள் மனு தள்ளுபடி

Bilkis Bano Case : பில்கிஸ் பனோ வழக்கு : குற்றவாளிகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சரணடைவதற்கான கெடு நாளை மறுநாளைக்குள் மட்டுமே என உத்தரவிடப்பட்டுள்ளது

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் இறுகும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள்.. பிரதமர் வருகைக்கான ஆயத்தங்கள் தீவிரம்

DD Tamil DD Podhigai : டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்படும் டிடி பொதிகை சேனல்

DD Tamil DD Podhigai : டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்படுது டிடி பொதிகை சேனல். இன்று பிரதமர் மோடி அதை துவங்கி வைக்கிறார்.

Ram Temple Saree : சிர்சில்லா கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவில் தோற்றம் கொண்ட பட்டு சேலை.

வேங்கை வயல் வழக்கு விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Cabinet Meeting January 23 : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23-ஆம் தேதி கூடுகிறது

Cabinet Meeting : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23-ஆம் தேதி கூடுகிறது. காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

PM Modi Visits Trichy: தனி விமானத்தில் திருச்சி வரும் பிரதமர் மோடி: காவல்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீரங்கம்! கடைகள் அடைப்பு!

பிரதமர் மோடி நாளை - 20 ஆம் தேதி காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து, காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேசுவரம் செல்கிறார். 2.10 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.  மேலும், நாளை மறுநாள் 21 ஆம் தேதி காலை, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.


அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் 10.25 முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். மேலும், 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தொடக்கம்

நீதிமன்றத் தலையீட்டால் பொங்கல் பண்டிகையின்போது போக்குவரத்து சீரானது. தற்போது போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது

பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மீது வழக்குப்பதிவு

Pallavaram MLA Karunanidhi : பணிப்பெண்ணைத் தாக்கியதாக எழுந்த புகாரில், பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

திமுக அதிரடி - கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு - கே.என். நேருவிற்கு முக்கிய பணி

DMK Election committee: திமுக அதிரடி - கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு - கே.என். நேருவிற்கு முக்கிய பணி

அடுத்த 3 மணி நேரம்! 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வேன் மோதி 6ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டத்தில் வேன் மோதி 6ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க., - அ.தி.மு.க. வாக்குவாதத்தால் மண்டையூர் ஜல்லிக்கட்டு தொடங்குவதில் தாமதம்

தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி தாமதம் ஆகியுள்ளது.

பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை

PM Modi To Tamilnadu : பிரதமரின் வருகையை ஒட்டி, 22000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

IT Raid Chennai : சென்னையில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை

IT Raid Chennai : சென்னையில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை



 கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு அதிரடி சோதனைகளில் வருமானத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை முதல் சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய்யபிஷேகம் இன்றுடன் நிறைவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய்யபிஷேகம் இன்று காலை 9 மணியுடன் நிறைவு பெற உள்ளது.

Breaking News LIVE: சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

Breaking News LIVE: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: அஸ்வினுக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: அமெரிக்கா - ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களுக்கு தடை

அமெரிக்காவில் ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் கைக்கெடிகாரங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென்னாப்பிரிக்காவில் இன்று தொடக்கம்.

15வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. 

Background

Petrol Diesel Price Today, January 19: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 608வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.