Breaking News LIVE: ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 14 Jan 2024 04:38 PM
Breaking News LIVE: பாஜக, ஆர்.எஸ்.எஸ் மீது சராமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி

பாரத் ஜோடோ நியாய் யாத்ரா தொடக்க நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் நாட்டில் பல்வேறு விஷ்யங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களின் சித்தாந்தங்களால் நாட்டை சிதைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது என குற்றாச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். 

Breaking News LIVE: போகி எதிரொலி - வளசரவாக்கத்தில் காற்று அதிகப்படியாக மாசு

போகி காரணமாக வளசரவாக்கம் பகுதியில் அதிகபட்சமாக காற்று 270  தரக்குறியீடு அளவிற்கு மாசு அடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இணைந்தார். இது மகாராஸ்ட்ரா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Breaking News LIVE: கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள ரயில்வே நிலையத்திற்கு ஆகாய நடைபாதை அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

சத்தீஸ்கரில் லேசான நில அதிர்வு! மக்கள் பீதி!

சத்தீஸ்கரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்காக நடத்தப்படும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதற்கான டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது.

Breaking News LIVE: ஐஸ்ஹவுஸ் மாதவன் கொலையில் 4 பேர் கைது

சென்னை ஐஸ்ஹவுஸ் மாதவன் கொலையில் தொடர்புடைய 4 பேர் திருவண்ணாமலையில் கைது - 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த பழிக்குப்பழி சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: அரசுப் பள்ளிக்கு நிலம் நன்கொடை - ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது

கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள். ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Breaking News LIVE: தமிழ்நாடெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

போச்சம்பள்ளியில் ரூபாய் 5 கோடி ஆடு, கோழிகள் விற்பனை

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனையாகியுள்ளது.

கடும் பனிமூட்டம்! வட மாநிலங்களில் ரெட் அலர்ட்!

உத்தரபிரதேசம், இமாச்சல், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - மதுக்கடையை மூட உத்தரவு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரையில் மதுக்கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்களை மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 

Breaking News LIVE: பொங்கல் பரிசுத்தொகை பெற இன்றே கடைசி நாள்..

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு வாங்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை 91% பேர் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - காவல்துறையினர் கட்டுப்பாடு விதிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது-  மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்களுக்கான 10 கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: மதுரையில் மல்லிகைப்பூ விலை ரூ.4 ஆயிரமாக உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்வால் மக்கள் கவலையடைந்துள்ளனர் - நேற்று ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்ட மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. 

Breaking News LIVE: நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தைப்பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது - இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

Background

Bhogi Air Quality Chennai: போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததன் மூலம், சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.


போகி பண்டிகை:


”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அந்த தீயிலேயே தண்ணீரை காய்ச்சி, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, இறைவழிபாட்டிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதனால், இன்று முதலே பொங்கல் பண்டிகை கொண்டாட்டமானது தமிழ்நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது.


காற்று மாசு:


ஆரம்பகாலங்களில் பழைய முறம், உடைந்து போன மரக்கூடை, கிழிந்து பயன்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் உடைகள், கோணிப்பை, துடைப்பம் ஆகியவற்றை எரித்தனர். இதோடு, கிராமப்புறங்களில் வயல்பகுதிகளில் கிடைக்கும், போகி முல்லை வெட்டி வந்து கொளுத்துவதும் உண்டு. அப்போது காற்று மாசு என்ற பிரச்னை பெரிதாக இருந்ததில்லை. ஆனால், நகரமயமாக்குதல் அதிகமானது பிறகு, போகிப் பண்டிகை கொண்டாட்டம் என்பதே பெரும் மாற்றம் கண்டுள்ளது. பாரம்பரிய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற கட்டாயத்தில் பலரும்,  டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்பட்டு, காற்று மாசு ஏற்படும் சூழல் நிலவுகிறது.


சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்:


அந்த வகையில் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இன்று போகிப் பண்டிகைக்காக, அதிகாலை முதலே தங்கள் வீட்டின் வாசலில் தீமூட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதில் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை கண்ணார காணமுடிகிறது. அதிலிருந்து வெளியேறும் நுண்ணிய துகள்கள், கொட்டும் பனியில் கலந்து அப்படியே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமடந்துள்ளது. வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் 200-ஐ கடந்து, சுவாசிக்கவே தகுதியற்றதாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், சுவாசப் பிரச்னை கொண்டு இருப்பவர்கள் முடிந்தவரையில் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புகையில்லா போகியை கொண்டாடுவோம் என அரசு பலமுறை வலியுறுத்தியும், பொதுமக்கள் அதனை சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என்பதையே சென்னை நிலவரம் காட்டுகிறது.


விமான சேவை பாதிப்பு:


விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதியிலும் கடும் மனிமூட்டம் நிலவுகிறது. இதனால், சிங்கப்பூர், லண்டனில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல்  ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி, மஸ்கட் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடி உள்ளன. புகைமூட்டம் தொடர்ந்தால், விமானங்களை  பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே, அந்தமான், புனே, மும்பை , டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத் மற்றும் மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதனால்,பயணிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.