Breaking News LIVE: ஆந்திராவில் இலவச புடவை வாங்கச் சென்ற 2 பெண்கள் கூட்ட நெரிசலில் பலி..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பில், குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயமடைந்ததாகவும், தலிபான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இலவச புடவைகளை வாங்கச் சென்ற பெண்களில் 2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஸ்ட்ரா மாநிலத்தில் நாசிக்கில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
”இந்தியாவில் வாழும் மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் புதிய ஆண்டு புது உத்வேகம், இலக்கு, சாதனைகளை நமது வாழ்க்கையில் கொண்டு வரட்டும். தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதி ஏற்போம்" என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
ஈரோடு, சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி சோதனைச்சாவடி முன்பு லாரி, ஆட்டோ, கார் உள்பட அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாட்டால் ஜனவரி 3, 4, 5 தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்
இந்தியாவில் புதிதாக 265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,706ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அதிமுக தலைமையகத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு கடிதம் எழுதியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த ஆவணங்களின்படியே அதிமுக அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ்குமார் உள்ளிட்ட 9 பேருக்கு பதவி உயர்வு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
"நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நிறைய வெற்றிகள் கிடைக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும். அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் கிடைக்கட்டும் என இறைவனை வேண்டுகிறேன்” என பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சம வேலை - சம ஊதியம் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க குழு அமைப்பு. அகவிலைப்படி உயர்வினை இன்று முதல் செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நிதித்துறை செயலர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைப்பு
தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34%லிருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் புத்தாண்டையொட்டி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீதும், 3 பேராக பயணித்ததாக 65 பேர் மீதும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் - 276 வாகனங்கள் பறிமுதல்
ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 6ஆவது நாளாகத் தொடர்கிறது.
சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் சென்ற 3 பேருந்துகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென கனடா அரசு தெரிவித்துள்ளது.
ஜன.05க்கு பிறகு கனடா வரும் சீன பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு
கறிக்கோழி விலை நான்காவது நாளாக ரூ.2 உயர்ந்து 114 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
டெல்லியில் நள்ளிரவு 11.19 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகி உள்ளது.
“கடந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாக இருந்தது. 2023ஆம் ஆண்டு சமூக பொருளாதார வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் புத்தாண்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு என் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். நமது குடும்பம், சமுதாயம், நாட்டுக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க நம்மை அர்ப்பணிப்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்தியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில்,பிள்ளையார்பட்டி கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சில அருகே புத்தாண்டு கொண்டாட ஏராளமான மக்கள் குவிந்தனர். பல்வேறு கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மக்கள் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயம், தூத்துக்குடி தூய பனிமய மாதா, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
Background
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 225ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (ஜனவரி.01) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -