மகா கும்பமேளா


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி,  பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

Continues below advertisement


இந்த மகா கும்பமேளா  உலகின் மிகப்பெரிய மத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும்  கும்பமேளாவானது, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் ( பூமிக்கு அடியில் பாயும் நதி ) சந்திக்கு இடமாக கருதப்படுகிறது. அங்கு கோடிக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக அமைதியை அடைய கங்கை நதியில் நீராடுகிறார்கள். 


கும்பமேளாவில் விஜய் தேவரகொண்டா


இந்தியா முழுவதிலும் இருந்தும் கும்பமேளாவிற்கு மக்கல் படையெடுத்து சென்று வருகிறார்கள். சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் மகா கும்பேளாவில் கலந்துகொண்டு கங்கை நதியில் நீராடியுள்ளார். இந்த புகைபடங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்