இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தனியார் நிறுவனமாக விளங்கி வருவது ஏபிஜி நிறுவனம். இந்த மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தவர் ரிஷி கமலேஷ் அகர்வால். இவர் இந்திய அரசுக்கு சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து 22 ஆயிரத்து 842 கோடி வாங்கி வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காக அவர் மீது சி.பி.ஐ.யால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் குற்றம் சாட்டுகளை கூறி வருகிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "வங்கி கடனை வாங்கி செலுத்தாதவர்களான நீரவ்மோடி, மெகுல் சோக்ஷி, லலித் மோடி, விஜய் மல்லையா, ஜதீன் மேத்தா, சேத்தன் சந்தீசாரா ஆகியோர் பட்டியலில் தற்போது ரிஷிகமலேஷ் அகர்வால் இணைந்துள்ளார். 2018ம் ஆண்டே ஏ.ஜி.பி. நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்தது. ஆனால், ஏஜிபி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஏன் ஐந்து ஆண்டுகள் ஆகியது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க : ரூ.22,842 கோடி மோசடி.. ABGயார்டுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது சிபிஐ..
2007ம் ஆண்டு குஜராத்தில் ஏஜிபி கப்பல் கட்டும் தள நிறுவனத்திற்காக 1 லட்சத்து 21 ஆயிரம் சதுரமீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டது. அப்போது, குஜராத்தின் முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்ட்ராவில் உள்ள சூரத், பாரூச், மும்பை மற்றும் புனே உள்பட ஏஜிபி நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் நேற்று சி.பி.ஐ. சோதனை நடத்தியது. பராத ஸ்டேட் வங்கி சார்பில் முதன்முதலாக 2019ம் ஆண்டு நவம்பர 8-ந் தேதி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், போதுமான ஆவணங்கள் இல்லாததால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. இந்த சூழலில், கடந்த 7-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏபிஜி நிறுவனத்தினர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை தவறுதலாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் படிக்க : Watch Video | தண்டவாளத்தில் விழுந்த சிறுமி.. உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்.. வைரலாகும் வீடியோ!
மேலும் படிக்க : சாப்பிட வந்த மாற்றுத்திறனாளி..! மரியாதைக்குறைவாக நடத்திய ஊழியர்கள்..! மன்னிப்பு கோரிய உரிமையாளர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்