ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது குர்கான். அந்த மாநிலத்தின் முக்கிய நகரமான குர்கானில் அமைந்துள்ள பிரபல உணவு விடுதிக்கு ஸ்ரீஷ்டி என்ற பெண் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றுள்ளார். ஆனால், உணவு விடுதியில் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அந்த பிரபல உணவக ஊழியர் ஒருவர் அவமானப்படுத்தும் நோக்கத்தில் நடந்துள்ளார்.


இதுதொடர்பாக, ஸ்ரீஷ்டி தனது டுவிட்டர் பக்கத்தில், “ நேற்று இரவு எனது சிறந்த தோழி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ராஸ்டா உணவகத்திற்கு சென்றிருந்தேன். நீண்ட காலத்திற்கு பிறகு என்னுடைய முதல் வெளியூர் பயணங்களில் ஒன்றாகும். நான் வேடிக்கை பார்க்க விரும்பினேன். என் தோழியின் சகோதரர் நான்கு பேருக்கும் ஒரு மேஜை கேட்டார். ஆனால், ஊழியர்கள் இரண்டு முறை புறக்கணித்தனர்.










மூன்றாவது முறை அவர் கேட்டபோது, சக்கர நாற்காலி எல்லாம் உள்ளே கொண்டு செல்ல முடியாது என்று கூறினர். அவர் அப்படி கூறியது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.” இவ்வாறு அவர் பதிவிட்டார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.






 


அவரது பதிவைக் கண்ட அந்த தனியார் உணவகமான ராஸ்டா உணவகத்தின் உரிமையாளர் கௌம்தேஷ் சிங் ஸ்ரீஷ்டியின் டுவிட்டரை டேக் செய்து மன்னிப்பு கோரியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், “அன்புள்ள ஸ்ரீஷ்டி பாண்டே, இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கிறேன். உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்காக ஒட்டுமொத்த அணியின் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் உறுப்பினர்கள் யாரேனும் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும், அந்த தனியார் உணவகம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் எந்த காரணத்திற்காகவும் யாரும் தனிமைப்படுத்துவதை ஒருபோதும் விரும்ப மாட்டோம். பாதிக்கப்பட்ட நபரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க நாங்கள் அணுகியுள்ளோம். இது மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்துவோம்.”


இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண