கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் உயிர்நீத்த இந்திய ராணுவ நாய் 'ஆக்சல்' இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான வீர விருதுகளில், மரணத்திற்குப் பின் 'மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்
பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நாய், தனது பணிக்காக விருது பெற்ற முதல் ராணுவ நாய் ஆகும். பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 'மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்' இராணுவ வீரர்கள் 40 பேருக்கும், ஒன்று விமானப்படை வீரருக்கும், மற்றொன்று 'ஆக்ஸலுக்கும்' ஒப்புதல் அளித்துள்ளார். எல்லைகள், போர் பகுதிகளில் துணிச்சலான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுதி வாய்ந்த சேவையை அங்கீகரிப்பதற்காக 'மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்ஸ்' வழங்கப்படுகிறது.
குடியரசு தலைவர் ஒப்புதல்
ஆபரேஷன் ரக்ஷக், ஆபரேஷன் ஸ்னோ லியோபார்ட், ஆபரேஷன் ரினோ, ஆபரேஷன் ஆர்க்கிட், ஆபரேஷன் ஃபால்கன், ஆபரேஷன் ஹிஃபாசாட் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக, 'மெண்ஷன்-இன்-டெஸ்பாட்ச்'களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆக்சல் ராணுவ நாய்
ஆக்செல்' 26 வது இராணுவ நாய் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. அது ஆபரேஷன் ரக்ஷக்கில் ஈடுபட்டது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் இந்த இரண்டு வயது நாய்க்கு ராணுவ விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஆக்சலை பல தோட்டாக்கள் துளைத்திருந்தன. எட்டு மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த கட்டிடத்தில் ஒரு பயங்கரவாதியின் இருப்பிடத்தைக் கண்டறிய இராணுவப் படைகளுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
சண்டையின்போது நடந்தது…
ஆக்சல் கண்டுபிடித்த குப்வாராவைச் சேர்ந்த அக்தர் ஹுசைன் பட் என்று பின்னர் அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். இவர் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடையவர். 'ஆக்செல்' முதல் இருப்பவர்களை கண்டுபிடிக்க உதவி, இரண்டாவது அறைக்குள் நுழைந்தவுடன், ஒரு பயங்கரவாதி அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். சுடப்பட்டு 15 வினாடிகளுக்கு அசைந்ததாகவும், அதன் பின்னர் கீழே விழுந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து 'ஆக்சல்' உடலை ராணுவம் மீட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்