Shivamogga Subbanna: தேசிய விருது பெற்ற முதல் கன்னட பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா காலமானார்...பிரதமர் இரங்கல் தெரிவித்தார்   


பிரபல கன்னட பாடகரும் தேசிய விருது பெற்ற சிவமொக்கா சுப்பண்ணா ஆகஸ்ட் 11ம் தேதியான நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83. அவருக்கு ஒரு மனைவி, மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 


மருத்துவமனையில் உயிரிழப்பு:


சுகம சங்கீத பாடகரான இவர் பெங்களூருவை சேர்ந்தவர். உடல் நலக்குறைவால் பெங்களுருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில்  அனுமதிப்பட்டு இருந்தார் சிவமொக்கா சுப்பண்ணா என நெருங்கிய உறவினர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 



தேசிய விருது பெற்ற முதல் கன்னட பாடகர்:


மூத்த பின்னணிப் பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா காடு குதிரை படத்தில் இடம் பெற்ற "காடு குதிரை ஓடி பந்திட்ட..." எனும் பின்னணி பாடலுக்காக தேசிய விருதை பெற்ற முதல் கன்னட பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஞானபீட விருது பெற்றவர் இந்த கன்னட எழுத்தாளர். மேலும் குவேம்பு எழுகிய பாடல்கள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். 


தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர்:


கன்னட மொழியில் பகவத் கீதையை கேட்டு வளந்தவர் இந்த கானடா பாடகர். அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கும். அவருக்கென ஒரு தனிப்பட்ட குரல் வளம் உள்ளது. அந்த குரலால் இசை ரசிகர்களை அவர் என்றும் மெய்சிலிர்க்க வைப்பார். 






ரசிகர்கள் இரங்கல் : 


சுப்பண்ணா ஒரு முன் மாதிரியான பாடகர் மட்டுமின்றி வழக்கறிஞராகவும் நோட்டரி பப்ளிக் மெம்பெராகவும் இருந்தவர். மேலும் ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் உள்ளிட்டவையில் பாடகராக பணிபுரிந்துள்ளார். சிவமொக்கா சுப்பண்ணாவின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. இவரது மறைவு செய்தி கேட்டதும் பல நெட்சங்கள் தங்களது இதயப்பூர்மான இரங்கலை தெரிவித்து  கொண்டனர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பல அரிசியல் தலைவர்கள்  தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பலரும் சமூக வலைத்தளங்களில் வரின் இறப்பிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை ட்வீட் மூலம் பதிவு செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் சிவமொக்கா சுப்பண்ணாவின் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.