Independence Day 2022 Wishes: நாட்டின்  75-வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15ஆம் தேதி ) கொண்டாடபட இருக்கிறது. இருநூறு ஆண்டுகால ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்குப் பிறகு இந்தியா காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடி வருகிறது. 


நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ’விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்து கொண்டாடி வருகிறது. பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளை மத்திய அரசு கடந்த ஓராண்டாக நிகழ்த்தி வருகிறது. இதையடுத்து, 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.


சுதந்திரத்தின் 75 ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், அனைவரும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடுவோம் வாங்க..


நாம் சுத்ந்திர காற்றை சுவாசிக்க, தியாகிகள் தைரியத்துடன் போராடியதையும்,  அவர்கள் நமக்கு அளித்த சுதந்திரத்தையும் மதிக்கிறோம். 75-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்தியா.


இந்த நாளை நமது தேசம் கொண்டாட அனுமதிக்க, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்தனர். அவர்களின் தியாகங்களை ஒருபோதும் நாம் புறக்கணிக்கக் கூடாது. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


75-வது சுதந்திர தின வாழ்த்துக்கள். உங்கள் மனதில் சுதந்திரத்தின் பெருமை ஊற்றெடுக்கட்டும்.  இந்தியன் என்று பெருமையுடன் சொல்வோம். நம் தேசத்திற்கு வணக்கம் செலுத்துவோம்.


இந்த சுதந்திர தினத்தில், நமது அற்புதமான நாட்டின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த உறுதி ஏற்போம். 75வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்தியா.


75வது சுதந்திர தின வாழ்த்துக்கள். கலாச்சார வரலாற்றில் செழுமையான, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் தேசமான இந்தியாவுக்கு  சல்யூட்.






இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய மக்களின் தியாகங்களை எப்போதும் நினைவில் வையுங்கள். அவர்களுக்கு நன்றி. சுதந்திர தின வாழ்த்துக்கள்.


இந்த அற்புதமான நாளில் புத்தம் புதிய வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு மகிழ்ச்சியான சுதந்திர தினம் அமையும் என்று நம்புகிறேன். 75வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இன்று இந்தியக் கொடியுடன் உங்களின் வாழ்வின் உற்சாகம் உயரட்டும். 75-வது சுதந்திர தின வாழ்த்துக்கள்!


நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.


என் தேசத்தின் மீதான என் அன்பு எல்லையற்றது. என் மக்கள் மீதான என் அன்பு முடிவற்றது. எனது நாட்டிற்காக நான் விரும்புவது மகிழ்ச்சியை மட்டுமே. 75வது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவிக்கும் முதல் நபராக நான் இருக்கட்டும்! இனிய சுதந்திர தின வாழ்த்துகள் உறவுகளே!


இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நமது மகத்தான தேசத்தின் அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்போம்.






இந்தியா என்பதை பிரிக்கும் எதையும் நாம் தடுக்க வேண்டுமென உறுதி ஏற்போம். இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


தியாகிகளின் தன்னலமற்ற துணிச்சலான செயல்களுக்காக அவர்களைக் போற்றுவோம். நமது சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்காக அவர்களுக்குப் பெருமை சேர்ப்போம். இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


சிந்தனை சுதந்திரம், மொழியில் நம்பிக்கை, தன்னம்பிக்கை. இந்த சுதந்திர தினத்தில் நாட்டுக்கு வணக்கம் செலுத்துவோம்.


இந்தியாவின் சுதந்திரத்திறகு பலர் தங்கள் உயிரைக் கொடுத்ததால், நாம் இன்று சுதந்திரமாக இருக்கிறோம். 75 வது சுதந்திர தினத்தில் இன்னுயிர் நீத்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.


நமது நாட்டின் மகத்துவத்தையும், இந்தியனாக இருப்பதன் அர்த்தத்தையும் கொண்டாட ஒன்று கூடுவோம்.  சுதந்திர தின வாழ்த்துக்கள்.