ஆணாக மாறி தோழியை திருமணம் செய்த இளம்பெண் - பெற்றோர்கள் அதிர்ச்சி

திருப்பூரில் ஆணாக மாறிய இளம்பெண் தனது தோழியையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

 திருப்பூர் காங்கேயம் சாலையைச் சேர்ந்தவர் அனிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 21 வயதான அந்த பெண் அதே பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவருடன் கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். தொடக்கத்தில் நட்பாக பழகிய இவர்கள் இருவரும், நாளடைவில் நெருங்கிய தோழிகளாக மாறி ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

Continues below advertisement


இந்த நிலையில், அனிதாவின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அனிதாவும், கவிதாவும் மருத்துவரை அணுகினர். மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அனிதா சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்கு பிறகு அனிதா திருநம்பியாக மாறினார். பின்னர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்ற அனிதாவும், கவிதாவும் அங்குள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த அனிதா மற்றும் கவிதாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் தங்களை தேடுவதையும், தங்கள் மீது புகார் அளிப்பது பற்றியும் அறிந்த இளம்பெண்கள் இருவரும் உடனடியாக திருப்பூர் திரும்பினர். திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள் இருவரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


திருநம்பியாக மாறிய அனிதா மற்றும் அவரை திருமணம் செய்து கொண்ட கவிதா ஆகிய இருவரின் பெற்றோர்களையும் திருமண வீட்டார் அழைத்துப் பேசி, விசாரித்து வருகின்றனர். அனிதா மற்றும் கவிதா இரு பெண்களின் பெற்றோர்களும் தங்களது மகள்களிடம் வீட்டுக்கு திரும்பி வந்துவிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இருவரும் ஒன்றாகதான் வாழ்வோம் என்று காவல்நிலையத்தில் வாக்குவாதம் செய்து வந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆணாக மாறிய இளம்பெண் தனது தோழியையே திருமணம் செய்து கொண்டது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : கஞ்சா பதுக்கியவர் கைது...மலைக்க வைக்கும் மல்லி விலை....சீசனிலும் சிக்காத மீன்... இன்னும் பல மதுரை செய்திகள்!

மேலும் படிக்க : 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை: த்ரிஷா வெற்றி

மேலும் படிக்க : Watch Video | ஐயா.. சாமி.. தன் மூச்சை கொடுத்து குழந்தைபோல குரங்கை காப்பாற்றிய மனிதம்.. வைரலாகும் வீடியோ..

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola