சாலையோரத்தில் குரங்கு ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 38 வயது நிரம்பிய, பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். சாமி.. ஐயா.. என்று முதலில் குரங்கின் நெஞ்சை அமுக்கி அதனை விழிக்கச்செய்ய அந்த நபர் முயற்சி செய்தார். ஆனால் குரங்கு கண் விழிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து குரங்கின் வாயில் தன் வாயை வைத்து ஊதினார். அவர் தொடர்ந்து ஊதிய நிலையில், குரங்கு கண் விழித்தது. இதனையடுத்து அந்த குரங்கை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆயத்தமானார்.
இது தொடர்பான வீடியோவை The New Indian Express பத்திரிகையாளர் திரு செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.