1. மீன்பிடி சீசன் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையிலும் ராமநாதபுரம், தனுஷ்கோடி பகுதியில் கரைவலையில் குறைவான மீன்களே சிக்கின. விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


2. ராமநாதபுரம் அருகே, தேவிபட்டினம் புறக்குடி பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் கரண் 22, இவர் 17 வயது மைனர் பெண்ணை, திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில், மைனர் பெண்ணை கடத்திச் சென்ற கரணை, ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


3. தொடர் மழையின் காரணமாக விளாத்திக்குளம் பகுதியில் சாகுபடி செய்த முண்டு மிளகாய் வத்தல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



4. காரைக்குடியில் பழைய தங்கத்தை விலைக்கு வாங்கும் தனியார் நிறுவனத்தில் 27 பவுனை திருடிய முன்னாள் ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.



5. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் ஆஞ்ச நேயர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து மறியல் செய்த பி.ஜே.பியினருக்கும். போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



6. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் இந்தாண்டில் நேற்று மல்லிகைப் பூ விலை உயர்ந்து ரூ.4 ஆயிரம் என உச்சம் தொட்டது.



7. திருநெல்வேலி மாவட்டத்தில் தொலைந்துபோன மற்றும் தவறவிட்ட செல்போன்கள் திருநெல்வேலி மாவட்டம் சைபர் கிரைம் போலீசாரால் மீட்டு அதன் உரிமையாளர்க்கு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில்  வழங்கப்படவுள்ளது.


8. நெல்லை மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பதியாபுரம் பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது  சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த திருப்பதியாபுரத்தை சேர்ந்த கணேசன்(65), மற்றும் 
சிவசுப்பிரமணியன்(35) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


9. தேனி மாவட்டம்  வருசநாடு அருகே, மலைப்பகு தியில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்த போலீசார். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.


10. கொரோனா தடுப்பூசி இரு தவணை செலுத்தியவர்கள் மட் டுமே மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை ரத்து செய்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


 


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!