சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (56). இவரது மகன் கண்ணன் (18), அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். மகள் மதுமிதா (22), திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.


தம்பியை இழந்த சோகத்தில் தற்கொலை


இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கண்ணன் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். இதில் பெரும் துக்கம் மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளான மதுமிதா, கடந்த ஆறு மாதங்களாக சரியாக சாப்பிடாமலும் யாருடனும் பேசாமலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.02) தனது வீட்டில் மதுமிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் மதுமிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் படிக்க: Watch video: பல்வேறு கோயில்களில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை.. கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?


Crime : இப்படி ஒரு இடத்தில் ரகசிய கேமராவா? டிவி பார்த்தபோது ஷாக்கான குடும்பத்தினர்! பிரபல நிறுவனம் கொடுத்த அறிக்கை..


ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவு


மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் முன்னதாக நடத்திய விசாரணையில், தம்பி மீது அதிக பாசம் கொண்ட மதுமிதா அவர் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ள்து விசாரணையில் தெரிய வந்தது.


மதுமிதாவுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே கடந்த நிலையில் திருமங்கலம் ஆர்டிஓ விசாரணைக்கு முன்னதாக உத்தரவிட்டப்பட்டுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!


Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண