44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 187 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் ஆறு அணிகள் பங்கு பெற்றுள்ளன. ஆறு அணிகளில் ஒவ்வொரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சில நாட்கள் போட்டியின் போது சறுக்கல் ஏற்பட்டாலும் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்று விளையாடி வருகிறது.

 




 


வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தினம் ஒரு மெனு என்ற அடிப்படையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வேலையும் சுமார், 40 வகை மேல் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டி,  இன்று ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வீரர் மற்றும் வீராங்கனைகள், தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு வருவதை தவிர்த்து அவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என இன்று ஒருநாள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

 


 




இதற்கு முன்னதாக நேற்று இரவு மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அனைத்து வீரர் மற்றும் முக்கிய நபர்கள் இணைந்து நடைபெறும் விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் கலந்து கொள்பவர்களுக்கு மது உள்ளிட்ட பொருட்கள் பரிமாறப்பட்டது.  நள்ளிரவு பத்து மணி அளவில் துவங்கும் இந்த விருந்து காலை 3 மணி வரை நடைபெற்றது. வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் இந்த விருந்தில் அவர்களை கவரும் மண்ணும் சிறு சிறு விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஸ்கோ லைட்டுகள் ஆகியவை பொறிக்கப்பட்டு வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடினர். 


இந்த விருந்துக்கு பெயர் பெர்முடா என பெயர் வைக்கப்பட்டுள்ளது இதில் பீர் வகைகள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது . இது தவிர இந்த விருந்தில் வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள் அதிகாரிகள் இந்திய செஸ்கூட்டமைப்பு ,சர்வதேச செஸ் கூட்டமைப்பை சார்ந்த அதிகாரிகள் சார்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்பவர்களுக்கு முன்னதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் ,அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.