வாடகை அறையில் தங்கி இருந்த குடும்பத்தினர் ஹாயாக டிவி பார்த்துக்கொண்டிருந்த போது, டிவி இருந்த மேசையில் கேமரா இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டிஜிட்டல் யுகத்தில் பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது தனியுரிமை பாதுகாப்பு. வீட்டை விட்டு வெளியே சென்றால் நமக்கென்று ஒரு பிரைவசி உண்டா என்றே சந்தேகம் வருகிறது. விடுதிகள், தங்கும் அறைகள் எல்லாம் எந்த அளவுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. எந்த இடத்தில் எந்த வடிவத்தில் கேமரா இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. தினம் தினம் அப்படியான குற்றச்சம்பவங்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில் கனடாவில் ஒரு பிரபல நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கனடாவில் ஹோட்டல்கள், தங்கம் விடுதிகள், அறைகள் என வாடகைக்கான தங்கும் இடங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிறுவனம் Airbnb. மிகவும் பிரபலமான இந்த நிறுவனத்தின் மூலமே கனட மக்கள் அதிகம் வாடகைக்கான இடங்களை தேடிக்கொள்வர். ஓரிரு நாட்களின் தங்கும் இடமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சிலமாதங்கள் தங்கள் இடமாக இருந்தாலும் சரி அவரவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப இடங்களை கொடுக்கும் இந்நிறுவனம். மிகவும் பிரபலமான இந்நிறுவனம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.
Airbnb சர்வீஸ் கீழ் வழங்கப்படும் அறைகளில் எல்லாம் ரகசிய கேமரா இருப்பதாக தொடர்ந்து புகாரெழுந்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது கனட குடும்பம் ஒன்று கேமரா சர்ச்சையை கிளப்பியுள்ளது. கனடாவின் ப்ராம்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் Airbnb மூலம் வீடை வாடகை எடுத்து தங்கியுள்ளனர்.ஜாஸ் என்பவர் தன்னுடைய உறவினர்கள் 3 பேருடன் வீட்டு ஹாலில் படுத்துக்கொண்டு டிவியில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் டிவி இருந்த மேசையை உற்று நோக்கியுள்ளார். மேசையில் அடியில் ஒரு ஓட்டை போல இருந்துள்ளது. அதனுள் கேமரா ஒன்று இருந்துள்ளது. முன்பக்கம் கேமரா லென்ஸ் இருந்துள்ளது. அதன் பின்புறம் மூடப்பட்ட டிவி மேசைக்குள் இருந்துள்ளது. இதனை பார்த்து ஷாக்கான அவர் தன்னுடைய செல்போனில் அந்த கேமராவை படம் பிடித்து இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் புகாரளித்துள்ளார்.
இது குறித்து குறிப்பிட்ட வெப்சைட்டில், கேமரா மற்றும் ரெக்கார்டிங் டிவைஸ் பாதுக்காப்பு காரணத்துக்காக பொருத்த விதி உண்டு எனக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த ஜாஸ், பாதுகாப்பு காரணத்துக்காக குறிப்பிட்ட இடங்களில் அதற்கான தேவையான இடங்களில் பொருத்தலாம். எந்த தேவையுமில்லாத ஒரு வீட்டில் ஏன் இருந்தது என தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ள அந்நிறுவனம், வீடுகளில் உள்ள கேமராக்கள் குறித்து தெளிவான விளக்கத்தை நிறுவனம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் நாங்கள் வாடிக்கையாளர்கள் தனியுரிமையை மதிக்கிறோம். இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு பணமும் திருப்பித்தரப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்