இரண்டு ஆண்டுகளாக தன்னை காதலித்த கல்லூரி மாணவி தன்னை விட்டு சென்றதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.


சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த திங்கட் கிழமை மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சக மாணவிகளுடன் ராணி காத்திருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் ராணியிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு ராணி, சரியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் மாணவியின் முகத்தில் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டார்.


ராணி ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, தேனாம் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி அந்த நபரிடம் சிறிது நேரம் போராடியதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


பிறகு போலீசார் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்றும், இவர் கத்தியால் குத்திய மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் தனியாக பல இடங்களுக்கு சென்று சுற்றியதும் தெரிய வந்தது.


இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், இனி பிரசாந்த்தை பார்க்க கூடாது என்று மாணவியை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால் மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்தை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். பலமுறை தனது காதலியை பார்க்க கல்லூரிக்கு வந்தும் அவர் பிரசாந்திடம் பேசாமல் சென்றதாக கூறப்படுகிறது. 


இதையடுத்து, தனது காதலியின் தோழிகள் மூலம் அறிந்து கொண்ட பிரசாந்த், தனக்கு கிடைக்காத அவள், யாருக்கும் கிடைக்ககூடாது என்று முடிவு செய்து கத்தியால் குத்தி கொலை செய்யும் நோக்கில் கல்லூரி முன்பு வந்தது விசாரணையில் தெரியவந்தது.


அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் தனது மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததை தெரிந்து கொண்ட பிரசாந்த் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்திருக்கிறார்.  அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண