சமீப காலங்களில் திணை, வரகு, க்வினோவா போன்ற தானியங்களை எடைக் குறைப்பிற்காகவும் ஊட்டச்சத்திற்காகவும் சூழலியல் அக்கறையின் அடிப்படையிலும் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுவது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் எத்தியோப்பிய நிலப்பரப்புகளில் பயன்பாட்டில் இருந்த டெஃப் என்னும் சிறிய தானியம் அதன் பயன்களுக்காகப் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா, கனடா, சுவிஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் டெஃப் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


இத்தானியம் அதிகமான புரதச் சத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் அமினோஅமிலங்கள், இரும்புச் சத்து, கால்சியம்,  ஜின்க் என்று மற்ற தானியங்களில் அதிகம் கிடைக்காத சத்துகள் இதில் ஒருசேர கிடைக்கின்றன. மற்ற தானியங்களில் மிக அரிதாகவே காணப்படும் பாலிஃபீனால்கள் உள்ளிட்ட உயிரிச்சத்துகள் இதில் அபரிமிதமாக இருக்கின்றன.



பெரும்பாலும் அரிசி மற்றும் கோதுமையை நம்பியிருப்பதால், இந்திய மக்கள் புரதச் சத்து மற்றும் விட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு சிறந்த ஒரு தீர்வு இந்த டெஃப் தானியம். குளூட்டன் அற்ற இதன் தன்மை மற்றும் குறைவான கிளைசெமிக் குறியீடு இதை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இசைவான உணவுப் பொருளாக மாற்றுகிறது. எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கும் டெஃப் சிறந்த உணவுப் பொருளாக இருக்கிறது.  


இந்த டெஃபை எப்படி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்?


அடிப்படை காய் கறிகளுடன், பருப்பு மற்றும் டெஃபை சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம். கோதுமை மாவுடன் கலந்து, பேகிங் பொடியையும் சேர்த்துக்கொண்டு, தோசையாக வார்த்து உண்ணலாம். இப்படி உண்ணும்போது எலுமிச்சை, மற்றும் பிற பழங்களையும் சேர்த்துக்கொண்டால் விட்டமின் ”சி”யும் உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.  


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்