ட்ரெட்மில் நடை பலருக்கும் பிடித்தமானது. எளிய முறை உடற்பயிற்சி. பயன் நல்கும் உடற்பயிற்சி. சீரான வேகத்தில் எடையை இழக்க விரும்பும் பலரும் ட்ரெட்மில்லைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், ட்ரெட்மில்லைப் பயன்படுத்தியே ஆச்சரியமூட்டும் வகையில் எடை இழப்பை உருவாக்கும் திட்டம் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த திட்டம் 12-3-30 ட்ரெட்மில் ட்ரெண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை சுவீகரிக்கும் பலரும் உறுதியளித்தபடியே இது எடை இழப்பை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளனர். அது என்ன தான் இந்த 12-3-30 ட்ரெட்மில் ட்ரெண்ட்?
உடற்பயிற்சி ஆர்வலரான லாரன் கிரால்டோ இந்த திட்டத்தைக் கண்டுபிடித்து, இதன் மூலம் முப்பது பவுண்டு எடையை (பதிமூன்று கிலோ) இழந்திருப்பதாகக் கடந்த நவம்பர் 2020-இல் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டார். அப்போதிலிருந்து இந்த திட்டம் செல்வாக்கைப் பெற்று வருகிறது.
12-3-30 என்ற எண்களின் பொருள் என்ன? 12 ட்ரெட்மில்லைப் பொறுத்தவேண்டிய கோணத்தைக் குறிக்கிறது. 3 ட்ரெட்மில்லின் வேகத்தைக் குறிக்கிறது. 30 பயிற்சியின் கால அளவைக் குறிக்கிறது. அதாவது, இந்த கோணத்தில், இந்த வேகத்தில், ட்ரெட்மில்லில் அரை மணிநேரம் பயிற்சி செய்யும்போது அது எடை இழப்பை உறுதி செய்கிறது. இது தான் இந்த ட்ரெண்ட்.
இதன் பின்னிருக்கும் அறிவியல், எளிமையானது. சம அளவில் ட்ரெட்மில்லைப் பொருத்தாமல் அதை ஒரு கோணத்தில் நிலைநிறுத்தும் போது நாம் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி உடற்பயிற்சி செய்யவேண்டி இருக்கிறது. அது அதிகமான கலோரிகளை எரிக்கிறது. அதுதான் விரைவான எடை இழப்பிற்குக் காரணம். அரை மணிநேரம் சம அளவில் இருக்கும் ட்ரெட்மில்லில் நடப்பதை விட கோணத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ட்ரெட்மில்லில் நடப்பது நிச்சயம் அதிக சக்தியைக் கோரும், விளைவு அதிக கலோரிகள் எரிப்பு.
மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க, இந்த இணைப்புகளைக் க்ளிக் செய்யவும்
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்