மாயன் பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், “ அஜித் சாரை பற்றி பேச யாருக்கும் இங்கு அருகதையே கிடையாது. அதுவும் சினிமாவையே நம்பி இருக்கும் உங்களுக்கு அருதையே கிடையாது. என்னோட படத்தை கலாய்த்தாலும் கிண்டலடித்தாலும் பராவாயில்லை. சினிமாவை சினிமாக் காரர்களே கொல்லாதீர்கள். ஒருத்தரோட உடம்பை பற்றியோ, நிறத்தை பற்றியோ சொல்ல யாருக்கும் துப்பு கிடையாது.


நீ யாருடா வெண்ணெய் சொல்றதுக்கு..


நீ யாருடா வெண்ணெய் சொல்றதுக்கு. நீ யாரா வேணாலும் இருந்துகொள். என் படத்தை எப்படி வேண்டுமென்றாலும் கிழித்துக்கொள். நான் ஒரு விசித்திரன் என்ற படத்தை எடுத்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டு என்னை நீ கிழி. அந்தப் படத்திற்காக 30 கிலோ எடை கூட்டியிருக்கிறேன். 30 கிலோ எடை குறைத்திருக்கிறேன். அந்தப்படம் சரியில்லை என்றால் நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன். 6 மாதம் உழைப்பு. எனக்கு சினிமாவின் வலி என்ன என்பது தெரியும். தயவு செய்து மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். விமர்சனம் செய்யலாம். ஆனால் தாயை விமர்சனம் செய்யக் கூடாது.” என்று பேசினார்.