உடல் எடை குறைப்பு இன்று பலரது கனவாக இருக்கிறது. கடினமான உடற்பயிற்சிகள், உணவு வழிமுறைகள், வாழ்க்கைமுறை மாறுதல்கள் என பலரது வாழ்க்கையும் உடல் எடையை சுற்றி நிர்ணயிக்கப்பட்டதாக மாறி வருகிறது. இது எந்தளவு ஆரோக்கியமான சூழ்நிலை என்பது பல்வேறு கருத்துகளுக்கு உட்பட்டு இருந்தாலும், உடல் நலத்தைக் குறித்த பார்வையும் விழிப்புணர்வும் கிட்டத்தட்ட அனைவருக்கும் இருப்பது நல்ல விஷயமாக இருக்கிறது.


நீங்கள் உடல் எடை இழப்பு பயிற்சியில் இருந்தால், உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், வயிறு தொப்பையைக் குறைப்பது மிகக் கடினமான செயல் என்று. கைகள், முகம், கழுத்து, தொடைகளில் எடையைக் குறைப்பது எளிதாக இருந்தால், அவ்வளவு எளிதாகக் குறையாத இடம் வயிறு. வயிறு தொப்பையை எப்படி குறைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.



க்ரன்சஸ் செய்வது உடலுக்கு வலுவூட்டக்கூடிய உடற்பயிற்சியாக இருந்தாலும் அது தொப்பையின் கொழுப்பைக் கரைக்கும் என்பது உறுதி கிடையாது. அது சதைகளை நன்றாக இறுக்கும் வாய்ப்பு இருந்தாலும் தொப்பையைக் குறைப்பது சந்தேகம் தான். ஆனால் உடல் உறுதிக்காக இந்த பயிற்சியை செய்யலாம்.


நார்ச்சத்து உட்கொள்வது உடல் எடையை பராமரிக்க மட்டுமல்லாமல் எடையை இழக்கவும் உதவி செய்யும், சீரணத்திற்கு உதவி செய்யும். நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுப் பொருட்கள் – ஓட்ஸ், பார்லி, க்வினோவா, கோதுமை.


குறைந்தது ஏழு மணி நேரம் ஆவது தூங்குவது உடலுக்கு நல்லது மட்டுமல்லாமல் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.


புரதச் சத்து தினம் எடுத்துக்கொள்ள வேண்டும். சீரணத்திற்கு உதவும், வயிறை நிரப்பும். புரதச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள் – தயிர், பன்னீர், கொட்டைகள், விதைகள், பீன்ஸ், சிக்கன்.


எல்லாவற்றுக்கும் மேல், தினம் எட்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.


மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளுக்கு..    


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்