உறவுகளுக்குள் சண்டைகள் வருவது இயல்பான விஷயம். ஆனால், அந்த சண்டைகளை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் வித்தியாசங்கள் உண்டாகின்றன. நெருக்கமான, மிக நெருக்கமான உறவுகளில் பிரச்சனைகளை ஆரோக்கியமான முறையில் அணுகுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எதனால்? மன்னிப்பு கேட்பதில் எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடுமா? உங்கள் உறவில் நீங்கள் மட்டும் தான் எப்போதும் மன்னிப்பு கேட்பவராக இருக்கிறீர்களா? உங்கள் மன்னிப்பு பிரச்சனைகளை மேலும் பெரிதாகாமல் தடுப்பதற்கான நோக்கத்தை மட்டும்தான் கொண்டிருக்கிறதா?
மன்னிப்பு ஒரு அழகான வார்த்தை. அந்த வார்த்தையுடன் கூடவே பொறுப்புணர்வும் உடன் வருகிறது. நாம் ஒரு உறவில் இருக்கும்போது அது எப்போதும் இருபக்க பாதையாக மட்டுமே இருக்கும். இரண்டு பக்கத்திலுமிருந்து பொறுப்புகளும், அது கேட்கும் வேலைகளும் நடக்க வேண்டும். ஆனால், ஒரு பக்கம் மட்டுமே எப்போதும் மன்னிப்பு கேட்டு சண்டைகளை முடிக்கும் பக்கமாக இருக்கும் பட்சத்தில், நடந்த தவறுகளில் இருந்து பாடங்கள் இரண்டு பக்கமும் போய் சேராத பட்சத்தில் அது ஒரு ஆரோக்கியமற்ற உறவுமுறைக்கு இட்டுச் செல்லும்.
மன்னிப்பு கேட்பதற்கு திறந்த மனநிலையும், கர்வங்கள் இல்லாத மனப்போக்கும் வேண்டும். இந்த இரண்டு பண்புமே ஒரு உறவுக்கு அடிப்படை தேவை. இந்த இரண்டும் இருக்கும் பட்சத்தில், தவறுகள் நேரும்போது, அதனால் ஏற்பட்ட விளைவுகளையும், காயங்களையும் திறந்த மனப்போக்குடன் அணுகுவதும், அதற்காக மன்னிப்பு கேட்பதும் நடக்கும். மன்னிப்பு என்பது கேட்டவுடன் முடிந்துவிடக் கூடிய பணி கிடையாது. அந்த தவறு நிகழ்ந்தது எதனால், எந்த மாதிரியான நடவடிக்கை அதற்குக் காரணமாக அமைந்தது, அதை ஆரோக்கியமான முறையில் மாற்ற என்ன செய்ய வேண்டும் போன்ற சிந்தனைகள் தொடர வேண்டும். இப்படியான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத மன்னிப்பு நிச்சயம் காயப்படுத்தும்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்