ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் ப்ளே ஆப் வாய்ப்பு சுற்றை நிர்ணயிக்கும் என்பதால் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறவே முயற்சிக்கும். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்த முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின.


இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ராகுலுடன் ஓப்பனிங் களமிறங்கிய டி காக், 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என வந்த வேகத்தில் ரன் அடித்துவிட்டு அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து ஹூடா களமிறங்கினார். ராகுலும், ஹூடாவும் சேர்ந்து நிதானமாக அடினர். இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி, 95 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்றது.  இதனால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருக்கிறது.


அதனை அடுத்து, சேஸிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு, ஓப்பனர்கள் ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஏமாற்றம் அளித்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய மிட்சல் மார்ஷ், பண்ட் ஆகியோர் ரன் சேர்த்தனர். 237 ரன்கள் எடுத்திருந்தபோது மார்ஷூம், 44 ரன்கள் எடுத்திருந்தபோது பண்ட்டும் ஆட்டமிழந்தனர். 


முக்கியமான இரு பேட்டர்களின் விக்கெட்டுகள் சரிந்த பிறகு, லலித் யாதவ் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி அணி தடுமாறியது. பொவல் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்சர் பட்டேல் 42 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில், டெல்லி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிப்பெற்றது.






இதனால், 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் லக்னோ அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது.







மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண