வெண்டைக்காய்- வேர்க்கடலை துவையல்... சாதத்துடன் வைத்து சாப்பிட சூப்பர் காம்போ!

சுவையான வெண்டைக்காய்-வேர்க்கடலை துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

வெண்டைக்காய் -250 கிராம் 

Continues below advertisement

வெந்தயம் - கால் டீஸ்பூன் 

கடுகு - சிறிதளவு

சீரகம் 1 ஸ்பூன்

மல்லி விதை 1 ஸ்பூன்

15 வர மிளகாய்

கறிவேப்பிலை ஒரு கொத்து

தக்காளி பெரியது 1 

புளி நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

செய்முறை 

முதலில் வேர்க்கடலையை கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். பாதியளவு வறுபட்டதும் பூண்டு பல்லையும் சேர்த்து வறுக்க வேண்டும். கடலை வறுப்பட்டதும் இதை இறக்கி ஆற வைக்க வேண்டும். 

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து( அதே கடாயையும் கழுவி விட்டு வைத்துக் கொள்ளலாம். கழுவாமல் வைத்தால் அடிப்பிடிக்கும்) அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெந்தயம், கடுகு சேர்க்கவும். 

கடுகு பொரிந்ததும் சீரகம் சேர்க்க வேண்டும். பொரிந்ததும் தனியாவை சேர்த்து வறுக்க வேண்டும். 

பின் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.( உங்களுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காரம் வேண்டும் என்றால் அதற்கேற்றவாறு மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். 

பின் இவை அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே பேனில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனுடன் புளி மற்றும் தக்காளியை சேர்த்து லேசாக வதங்கியதும். இவற்றையும் ஆற வைத்து வரமிளகாய் உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துவெ கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வெண்டைக்காயுடன் சேர்த்து கிளற வேண்டும். 

கடைசியாக கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையல் உடன் சேர்க்க வேண்டும்.  அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் வேர்க்கடலை துவையல் தயார். இதை சூடான சாதத்துடன் வைத்து சிறிது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும். 

மேலும் படிக்க 

Ragi Puttu: ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு புட்டு! இப்படி செய்தால் சூப்பரா இருக்கும்!

Beetroot Cutlet: இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட்டில் சுவையான கட்லெட் செய்யலாம் - செய்முறை இதோ!

Instant Dosa: வீட்டில் தோசை மாவு இல்லையா? இன்ஸ்டண்ட் தோசை, சட்னி செய்து அசத்துங்க- செய்முறை இதோ!

Continues below advertisement