தேவையான பொருட்கள்


பீட்ரூட் - 1 , உருளைக்கிழங்கு - 3 , வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) , பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் , இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) , பூண்டு - 1 டீஸ்பூன் (துருவியது) , மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் , மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் , கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் , சேமியா - 1/4 கப் , பிரட் தூள் - 3/4 கப் , உப்பு - சுவைக்கேற்ப , மைதா - 2-3 டேபிள் ஸ்பூன் , கொத்தமல்லி - சிறிது, எண்ணெய் - 4-5 டேபிள் ஸ்பூன்.


செய்முறை


உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட்டை குக்கரில் சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.


ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கையும், பீட்ரூட்டையும் வெளியே எடுத்து ஆற வைக்கவும்.


பின்னர் சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வேக வைத்து, இறக்கி தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


இதற்கிடையே பச்சை பட்டாணியை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 


உருளைக்கிழங்கை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 


பின் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட், சேமியா, மசாலா பொடிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கவும்.  கொத்தமல்லியைத் தூவி கிளறி ஆற வைக்க வேண்டும்.


பிறகு அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக கட்லெட் வடிவில் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 


இதற்கிடையே ஒரு கிண்ணத்தில் மைதா, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.


வேறொரு தட்டில் பிரட் தூளை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 


பின் தட்டி வைத்துள்ள கட்லெட்டை எடுத்து மைதாவில் பிரட்டி பின், பிரட் தூள்களில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தயார் செய்து வைத்துள்ள கட்லெட்டை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் கட்லெட் தயார்.