எப்போதும் அரிசி மாவில் இட்லியும், தோசையும் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்க பல வகை பருப்புகளை சேர்த்து ஒரு சுவையான தோசை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம்.


தேவையான பொருட்கள் 


இட்லி அரிசி 1 கப்


அரை கப் கடலை பருப்பு


பச்சை பருப்பு அரை கப்


வேர்க்கடலை கால் கப்


முழு உளுந்து 2 டேபிள் ஸ்பூன்


துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை


 இட்லி அரிசி, வேர்க்கடலை, உளுந்து, துவரம் பருப்பு , பச்சை பருப்பு, அனைத்தையும் நன்கு கழுவி 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ( இரவு ஊறவைத்து காலையில் அரைத்து உடனடியாக தோசை சுட்டுக் கொள்ளலாம்)


பின் இதனுடன் இரண்டு துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், நறுக்கிய 1 வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையும் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


இதை இட்லி மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை அப்படியே மூடிப்போட்டு வைத்து விட வேண்டும். 


இப்போது இதற்கு சட்னி தயார் செய்ய போறோம். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் உளுந்து, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, 10 வரமிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


உளுந்து, கடலைப் பருப்பு பொன்னிறமாக வறுந்ததும் நறுக்கிய 1 பெரிய வெங்காயம் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.


நறுக்கிய 2 மீடியம் சைஸ் கேரட், துருவிய கால் கப் தேங்காய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இரண்டு மீடியம் சைஸ் நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து இதை அப்படியே மூடி போட்டு 5 நிமிடம் விட்டு விட வேண்டும். பின் இது ஆறியதும் இதனுடன் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 


இந்த சட்னியை வழக்கம் போல் தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை வழக்கமான தோசை வார்ப்பது போன்று வார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி மிகவும் சுவையாக மொறு மொறுவென இருக்கும். 


 


மேலும் படிக்க 


Beetroot Cutlet: இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட்டில் சுவையான கட்லெட் செய்யலாம் - செய்முறை இதோ!


Badam Kesari: புரதச்சத்து நிறைந்த பாதாமில் நாவில் எச்சில் ஊறும் சுவையில் கேசரி செய்யலாம்.. செய்முறை இதோ!