தேவையானப் பொருள்கள்


கேழ்வரகு மாவு - ஒரு கப்

 

வேர்க்கடலை - 1/2 கப்

 

எள் - ஒரு டீஸ்பூன்

 

வெல்லம் - 1/2 கப் ( இதற்கு குறைவாக வேண்டுமானாலும் சேர்க்கலாம்)

 

உப்பு - துளி

செய்முறை


 

வேர்க்கடலை, எள் இரண்டையும் தனித்தனியாக கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 


வேர்க்கடலை ஆறியதும், தோல் நீக்கி விட்டு அதனுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில்  ஒரு சுற்று சுற்றி, அடுத்து வெல்லம் சேர்த்து மேலும் மேலும் ஓரிரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ல வேண்டும். ( அதாவது மைய அரைக்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.) 

 

கேழ்வரகு மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். ( அதிகமாக தண்ணீர் சேர்த்து விட கூடாது. மாவு உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.)


 

தண்ணீரை பன்னீர் தெளிப்பது போன்று தெளிக்க வேண்டும். (இல்லை என்றால் அது புட்டு போல் இல்லாமல் கொழகொழப்பாக மாறி விடும்)

 

எனவே குறைவான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலந்து விட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.

 

 பிசைந்த மாவை கட்டிகள் இல்லாமல் உதிர்த்து விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 

 

பின்னர் இந்த மாவை இட்லி அவிப்பது போல் ஈரத்துணி போட்டு மாவை அவிக்க வேண்டும்.
  

 


புட்டு வெந்தம் ஆவி வரும் மேலும் வாசம் வரும். இப்போது வெந்த புட்டை ஒரு தட்டுக்கு மாற்றி அதனுடன் பொடித்த வேர்க்கடலை எள்ளு பொடியை சேர்த்து கலந்து விட வேண்டும். விரும்பினால் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம். 

 

அவ்வளவுதான் சுவையான் ஆரோக்கியமான கேழ்வரகு புட்டு தயார்.

கேழ்வரகின் நன்மைகள்


கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், புரதம், நார்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளன.

 

கேழ்வரகில் உள்ள சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் சத்துக்கள்  எலும்புகள் மற்றும் பற்களை எளிமையாக வைத்துக் கொள்ள உதவும்.

 

கொழுப்பை கரைக்கக்கூடிய நார்சத்து கேழ்வரகில் அடங்கி உள்ளது.

 

மேலும் படிக்க