வீட்டில் தோசை அல்லது இட்லி மாவு இல்லாத நேரத்தில் நீங்கள் இன்ஸ்டண்டாக மொறு மொறு தோசை செய்து அசத்தலாம். சரி தோசை செய்தாச்சி, வீட்ல இட்லி பொடி, பீனட் பட்டர் இப்படி எதுவுமே இல்லனா என்ன பண்றது. கவலையே வேண்டாம் இன்ஸ்டண்ட்டா ஒரு சட்னியும் செய்து அசத்தலாம். வீட்டில் இருக்கும் ஒரு சில குறைந்த பொருட்களை வைத்தே இந்த சட்னி மற்றும் தோசையை செய்துவிட முடியும். இது நாம் வழக்கமாக செய்யும் தோசை மற்றும் சட்னிபோலவே மிகவும் சுவையாக இருக்கும். வாங்க முதலில் இன்ஸ்டண்ட் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை - 400 கிராம்
ரவை - 100 கிராம்
தயிர் -150 மிலி
அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, தேவையான அளவு உப்பு, தயிர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
இதை வழக்கம்போல் தோசை கல்லில் ஊற்றி தோசையாக வார்த்து எடுத்துக்கொள்ளலாம்.
இன்ஸ்டண்ட் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் -1
தக்காளி -3
பூண்டு பல் 2
சர்க்கரை- 1/2 இரண்டு சிட்டிகை
பருங்காயத்தூள் - 2 சிட்டிகை
1/4 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
1/4 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் இதை சேர்த்து இதனுடன், சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, பெருங்காயத்தூள், மிளகாய் பொடி, சாம்பார் பொடி, பூண்டு பல், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும் இதில் அரைத்த தக்காளி வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து மூடிபோட்டு வேக வைக்கவும்.
இந்த சட்னியை அடிப்பிடிக்காமல் கிளறி விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சட்னி தயார்.
இதை நீங்கள் தோசை அல்லது இட்லி உடன் வைத்து பறிமாறலாம் சுவை சூப்பரா இருக்கும்.
மேலும் படிக்க