தேவையான பொருட்கள்
சாஸ் தயாரிக்க
ஷாக்சிங் ஒயின் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
(oyster) சிப்பி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
கறி மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – அரை ஸ்பூன்
வெள்ளை மிளகு – அரை ஸ்பூன்
நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
சேமியா (அ) உலர்ந்த அரிசி நூடுல்ஸ் – 200 கிராம்
கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
முட்டைகள் – 2 ( சிறியதாக இருந்தால் 3 முட்டைகள்)
பூண்டு – 2 பல்
இஞ்சி – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
இறால் தோலுரிக்கப்பட்டு சுத்தம் செய்து வட்டமாக நறுக்கியது – 250 கிராம்
க்ரில்டு சிக்கன் – 250 கிராம்
கேரட் – 1 நறுக்கியது
மெலிதாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய் – 1
செய்முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி தனியே வைக்க வேண்டும்.
சேமியா அல்லது நூடுல்ஸை கொதிக்கும் நீரில் சேர்த்து வேகவைத்து எடுத்து, தனியாக உலர்த்த வேண்டும்.
நான்ஸ்டிக் கடாயில் அரை டேபிள் ஸ்பூன் எண்ணெயை மிதமான சூட்டில் சூடாக்கி அதில் முட்டைகளைச் சேர்த்து பிரட்டி வேக விட்டு எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்த்து ஒன்றரை நிமிடங்கள் கிளற வேண்டும். பின் இதில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கோழி இறைச்சி மற்றும் இறாலை சேர்க்க வேண்டும்.
இதை உடையாமல் கிளறி விட வேண்டும். இறால் வேகும் வரை அல்லது பன்றி இறைச்சி லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்னர் கேரட் சேர்த்து மென்மையாக மாறும் வரை கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இதில் நூடுல்ஸ் மற்றும் சாஸ் கலவையை சேர்க்கவேண்டும். சாஸ் நூடுல்ஸ் உடன் நன்றாக மிக்ஸ் ஆகும் வரை கிளறி விட வேண்டும். சமைத்த முட்டையை வாணலியில் போட்டு மிளகு தூவி எல்லாவற்றையும் நன்றாக கலக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் இதை நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து சூடாகப் பரிமாறவேண்டும்.
மேலும் படிக்க
TN Rain Alert: மதியம் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னையில் 8 விமானங்கள் ரத்து