மைதா – கால் கப்








சர்க்கரை – கால் கப்








உப்பு – கால் ஸ்பூன்








ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்








வெள்ளை எள்ளு அல்லது கருப்பு எள் - ஒரு தேக்கரண்டி







கெட்டியான தேங்காய் பால் - ஒரு கப்




எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



செய்முறை


முதலில் தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். 





பாத்திரத்தில், அரிசி மாவு, மைதா, உப்பு, பொடித்த சர்க்கரை, வெள்ளை எள்ளு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.








இதில் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். மாவை தோசை மாவு பதத்திற்கு கலக்கிக்கொள்ள வேண்டும்.





அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து, முறுக்கை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி  சூடுப்படுத்த வேண்டும்.

 




முறுக்கு அச்சை எண்ணெயில் 2 நிமிடம் வைத்து சூடாக்கி கொள்ள வேண்டும். பின் மாவில் முக்கால் பாகம் அளவிற்கு முக்கி எடுக்க வேண்டும்.








காய்ந்த எண்ணையில் அந்த மாவு தோத்த அச்சை அதில் சேர்க்க வேண்டும். மாவு அச்சை விட்டு வரும் வரை காத்திருக்கவேண்டும்.