தேவையான பொருட்கள்


இஞ்சி – அரை கிலோ





பாதாம் – அரை கப்








உலர் திராட்சைகள் – 25








வால்நட்கள் – கால் கப்








முந்திரி – கால் கப்








வெல்லம் – ஒரு கப்







நெய் – கால் கப்


 செய்முறை





இஞ்சியின் தோல் நீக்கி, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை நன்றாக அலசிவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.








பின்னர் முந்திரி வால்நட் மற்றும் பாதாம் என அனைத்தையும் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.( இதை பொடியாக அரைக்கக் கூடாது)








ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இதை 15 நிமிடங்களுக்கு கிளற வேண்டும்.








இப்போது வெல்லம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். வெல்லம் உருகியவுடன், பொடித்த நட்ஸ்கள், திராட்சை என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அல்வா பதம் வரும் வரை அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.







அவ்வளவுதான் சூடான, சுவையான அல்வா தயார். 





இஞ்சியின் நன்மைகள் 


இஞ்சி வயிற்றில் ஏற்படும் குமட்டலை தணிக்கிறது. இஞ்சி இயற்கையான ஆன்டி பயாடிக் ஆகும். இது வயிற்று வலிக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை விரட்ட உதவுகிறது. செரிமான செயல்முறையில் முக்கிய பங்காற்றும் உமிழ்நீரைத் தூண்டுவதற்கு இஞ்சி உதவுகிறது.


இஞ்சி உங்க மெட்டா பாலிசத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதால், மெட்டா பாலிச செயல்கள் அதிகரித்து உடல் எடையை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க 


Tsunami Day: அழியாத வடுவாக மாறிய “டிசம்பர் 26” : சுனாமி தாக்கியதன் 19-ஆம் ஆண்டு நினைவு இன்று..


Team India Announced: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்.. இந்திய மகளிர் அணியை அறிவித்த பிசிசிஐ!


Measles Vaccine: மழை வெள்ள பாதிப்பு: 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி.. பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..