ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே, நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி புதிய வரலாறு படைத்தது.
இந்தநிலையில், இப்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து, இந்த தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்தது.
வழக்கம்போல் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆல்ரவுண்டர் ஸ்ரேயங்கா பாட்டீல் முதல்முறையாக ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வருகின்ற டிசம்பர் 28ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 05ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இது தவிர டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக் , டைட்டஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ஹர்லீன் தியோல்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக் , டைட்டஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் முழு அட்டவணை:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி டிசம்பர் 30ஆம் தேதியும், பின்னர் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜனவரி 02 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்பிறகு டி20 தொடர் ஜனவரி 05ம் தேதி தொடங்குகிறது. பின்னர் இரண்டாவது போட்டி ஜனவரி 07 ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜனவரி 09 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.