Corn Rava Kichadi : ஆரோக்கியமான சோள ரவை கிச்சடி.. இந்த ஸ்டைலில் செய்து பாருங்க சூப்பரா இருக்கும்...

சுவையான சோள ரவை கிச்சடி எப்படி செய்வதென்று பார்க்கலாம்...

Continues below advertisement

கிச்சடியை நாம் வழக்கமாக அரிசி ரவை அல்லது கோதுமை ரவையில் செய்வோம். சோள ரவை கிச்சடி சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் இதில் நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகளும் உள்ளன. இந்த சோள ரவை கிச்சடியை எளிமையாக செய்து விட முடியும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்...

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

சோள ரவை - 1 கப் , மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2,  தக்காளி - 2,  பட்டாணி - 1/2 கப்,  இஞ்சி - ஒரு துண்டு,  பச்சைமிளகாய் - 2, கொத்தமல்லி - சிறிதளவு , நெய் - 1 தேக்கரண்டி எலுமிச்சம்பழம் - 1 உப்பு, எண்ணெய் - தேவையானது

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு - 1 தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி ,கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை

சோள ரவையை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். (ரவை தீயாமல் பக்குவமாக வறுத்து எடுக்க வேண்டும்) இதனையடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து அதில் தக்காளி, பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்து நன்றாக வதங்கியதும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து  கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, வறுத்து வைத்துள்ள சோள ரவையை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும். தீயை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். ( ரவையை தண்ணீரில் பொறுமையாக தூவி விட்டு கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும். 

சோளத்தின் நன்மைகள் 

வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 9, வைட்டமின் பி 12, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையாகும். மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களும் சோளத்தில் உள்ளன. இதில், அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.

சோளத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஏராளமான இரும்புச்சத்துகள் உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் சோளத்தை தக்க அளவில் உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க 

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு: சிபிஐ தரப்பின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்த மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம்

Movie Release Today: எந்த படத்துக்கு போறீங்க? இன்று வெளியாகும் புதுப்படங்கள் லிஸ்ட் இதோ! ரஜினி கமல் மூவியும் இருக்கு!

KCR Hospitalized: நெருக்கடி கொடுக்கும் ரேவந்த்! வழுக்கி விழுந்த கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி!

Continues below advertisement