ஒட்டுமொத்த இந்துய சினிமாக்களில் தமிழ் சினிமாவின் வர்த்தகத்திற்கு முக்கிய இடம் உண்டு. வர்த்தகத்தை வைத்து மட்டும் கடந்த காலங்களில் படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலங்களில் வர்த்தம் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை குறிப்பாக ‘ஃபீல் குட்’ படம் என பெயர் எடுக்க வேண்டும் என இயக்குநர்கள் தொடங்கி புரொடெக்ஷன் கம்பெனிகள் மற்றும் நடிகர்கள் என அனைவரிடத்திலும் இந்த எண்ணம் ஓரளவுக்கு வந்து விட்டது எனலாம். தமிழ் சினிமாவில் வாரவாரம் புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றது. இந்த வகையில் இந்த வாரம் ரிலீசாகும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஹாய் நன்னா
நானி, மிருணாள் தாகூர் நடிப்பில் அன்பின் சில பரிமாணங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் நடிகர் நானிக்கு தமிழில் மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என கூறப்படுகின்றது.
கான்சூரிங் கண்ணப்பன்
காமெடி நடிகர் சதீஷ் லீட் ரோலில் நடித்து இன்று அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் கான்சூரிங் கண்ணப்பன். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அவள் பெயர் ரஜினி
காலிதாஸ் ஜெயராம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அவள் பெயர் ரஜினி. ஹாரர் மற்றும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கட்டில்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. அவ்வகையில் நாளை வெளியாகவுள்ள ஒரு படம் கட்டில். இந்த படத்தினை இ.வி. கணேஷ் பாபு தயாரித்து இயக்கியுள்ளார். விதார்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலம் என்றால் நடிகை சுர்ஸ்தி டங்கே மட்டும் தான். இப்படம் இன்று வெளியானது.
தீ இவன்
நவரச நாயகன் கார்த்திக், டத்தோ ராதா ரவி, நடிகை சுகன்யா உள்ளிட்ட 80’ஸ் பிரபலங்கள் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள திரைப்படம் தீ-இவன். இந்த படத்தினை ஜெயமுருகன் என்பவர் தானே தயாரித்து, தானே இயக்கி படத்தில் பாடல்களையும் எழுதியுள்ளார்.
ஆத்மிகா
இன்று வெளியாகவுள்ள மற்றொரு த்ரில்லர் திரைப்படம் ஆத்மிகா. இந்த படத்தினை தாமோதரன் செல்வக்குமார் தயாரித்து இயக்கியுள்ளார். அனத் மற்றும் ஐஸ்வர்யா லீட் ரோலில் நடித்துள்ளனர்.
ரீ-ரிலீஸ்
இவை இல்லாமல் இன்று கமல்ஹாசன் நடிப்பில் 2001ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸான ஆளவந்தான் படம் மீண்டும் இன்று ரீ-ரிலீஸ் ஆகினறது. இதோடு 1995ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி ரிலீஸான முத்து திரைப்படம் மீண்டும் ரி ரீஸ் செய்யப்படுகின்றது. இந்த இரண்டு படங்களும் டிஜிட்டல் முறையில் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றது. ஏற்கனவே இவர்கள் நடித்த வேட்டையாடு விளையாடு மற்றும் பாபா படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழி திரைப்படங்கள்
இவை இல்லாமல் மலையாளத்தில் ரஞ்சித் சினிமா, தெலுங்கில் எக்ஸ்ட்ரா ஆடினரி மேன் மற்றும் இந்தியில் ஜோரம் போன்ற படங்கள் ரிலீசாகின்றன.