தேவையான பொருட்கள்
வாழைக்காய்-4
பெருங்காயம்- சிறிதளவு
கடலை பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல்- 9
மிளகு - 1 ஸ்பூன்
மல்லி விதை - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு- தாளிக்க
சீரகம் - ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
பூண்டு -10 பல்
மஞ்சள் பொடி
மிளகாய் தூள் -சிறிதளவு
செய்முறை
வாழைக்காயை தோல் நீக்கி விருப்பமான வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சூடான கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்பு நன்றாக வறுபட்டு சிவக்க ஆரம்பிக்கும் போது, அதில் மிளகு மற்றும் மல்லி விதையையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் 8 வர மிளகாயை சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்ததும், அதில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையையும் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் 10 பல் பூண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அரை ஸ்பூன் பெருங்காய தூளை சேர்க்க வேண்டும். அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விட வேண்டும். தேவை என்றால் லேசாக தண்ணீர் தெளித்து வேக விடலாம். வாழைக்காய் வெந்த பிறகு அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான வாழைக்காய் பொடி கறி ரெடி.
மேலும் படிக்க