ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கில் சி.பி.ஐ., தரப்பின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சி.பி.ஐ., தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் புதிய குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு. சி.பி.ஐ., தரப்பில் ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை நிராகரித்து நீதிபதி அதிரடி உத்தரவு.

 

தூத்துக்குடியில் உள்ள  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் (மே.2018)  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது அதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர்மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன்  சி.பி.ஐக்கு புகார் மனு அனுப்பினார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் விசாரணையும் மேற்கொண்டபட்டது.

 




 

இந்நிலையில் சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.  சி.பி.ஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சி.பி.ஐயின் இறுதி அறிக்கைகையை ரத்து செய்ய வேண்டும் கொலைகள் மற்றும் குற்றசெயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து திருப்பு வழங்கிய நீதிபதி சண்முகையா தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைகள் வழக்கில், ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என CBI யின்  குற்றப்பத்திரிக்கையை நிராகரித்த மதுரை நீதிமன்றம், மீண்டும் இந்த வழக்கில்  புலன்விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய இறுதியறிக்கையை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.