‘அவல் உப்புமா’ பிடிக்குமா? மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களின் பிரபலமான உணவு இது. காலை உணவாகவும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் அவல் உப்புமா உடன் டீ குடித்தால் நல்ல காம்பினேசன். இதை ‘போஹா’ என்று அழைக்கின்றனர். பல வகைகளில் செய்து ருசிக்கலாம்.


கொத்தமல்லி, பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு ஆகியவைகள் சேர்த்து செய்யும் அவல் உப்புமா ரொம்பவே சுவையாக இருக்கும். அதோடு, 'No Cook Food' வகையில் வருகிறது 'Dadpe Poha’. இதை வேக வைக்காமலே செய்து விடலாம். இன்னொரு டிஷ் தஹி சியா போகா (Dahi Chia Poha) ஆகிய உணவுகளை எப்படி செய்யலாம் என்று காணலாம்.


 என்னேன்ன தேவை?


அவல் - இரண்டு கப் 


தயிர் - ஒரு கப்


சியா விதைகள் - 2 டீஸ்பூன்


துருவிய கேரட் - ஒரு கப்


துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்


வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்’


சர்க்கரை - ஒரு டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


தாளிக்க..


எண்ணெய் - சிறிதளவு


கடுகு - ஒரு டீஸ்பூன்


சீரகம் - ஒரு டீ ஸ்பூன்


கருவேப்பிலை - சிறிதளவு


புதினா / கொத்தமல்லி - தேவையான அளவு


காய்ந்த மிளகாய் - 2 (தேவையான அளவு)


பெருங்காய தூள் - சிறதளவி


செய்முறை


தண்ணீரில் ஊற வைத்து அவல் தயாராக வைகக்வும். சியா விதைகளையும் ஊற வைக்க வேண்டும்.  கேரட், வெள்ளரிக்காய் இரண்டையும் துருவி எடுக்கவும். ஊறவைத்த அவல் உடன், தயிர், உப்பு, துருவிய கேரட், வெள்ளரிக்காய, வறுத்த வேர்க்கடலை, சிறிதளவு சர்க்கரை, சியா விதை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். 


இதன் பின்னர், தாளிக்க எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி எல்லாம் சேர்த்ததும் தாளிப்பை அவல் கலவையில் சேர்க்கவும். அவ்வளவுதான். 


Dadpe Poha


என்னென்ன தேவை?


அவல் - ஒரு கப்


வெங்காயம் - 1


தக்காளி - 1


எலுமிச்சை சாறு - ஒரு சிறிய கப் அளவு


பச்சை மிளகாய் - 2


வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் 


கடுடு - ஒரு ஸ்பூன்


எண்ணெய் - தேவையான அளவு


கருவேப்பிலை - சிறிதளவு


கொத்தமல்லி - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


செய்முறை


முதலில் தண்ணீரில் ஊற வைத்து அவலை வடிக்கட்டி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அவல், உப்பு, எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உள்ளிட்டவற்றை சேர்த்து என்றாக கலக்கவும். இதற்கடுத்து ஒரு ஸ்டெப்தான். அவல் உப்மா ரெடி ஆகிடும். அடுப்பில் கடாய் வைத்து மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதற்கானவற்றை போட்டு வதக்கவும்.


கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் வேர்க்கடலை, நறுக்கிய கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக கிளறவும். பின்னர், இதை அவல் கலவையில் கொட்டி நன்றாக கிளறவும். அவ்வளவுதான். ரெடி.


அவல் குறைந்த கலோரி கொண்ட உணவு. வெள்ளை, சிகப்பு அவல் என இரண்டையும் பயன்படுத்தலாம். ’Poha’ உணவுகளை பல வகையாக செய்யலாம். இதோடு வறுத்த வேர்க்கடலை, காய்ந்த கருப்பு திராட்சை, முந்திரி, பாதாம் என சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்ததாக மாற்றலாம். நாக்பூரில் பிரபலமான போகா ரெசிபியையும் விரைவில் காணலாம்.




மேலும் வாசிக்க..Steamed Poha Vada: மாலை நேர ஸ்நாக்ஸ் என்ன செய்யலாம்? அவல் வடை அசத்தலா செய்யுங்க!


Aloo Mattar Poha: உருளை பட்டாணி அவல் உப்மா.. இதை சாப்பிட்டா பசி செம்ம கண்ட்ரோல்.. உடல் எடையும் உங்க கண்ட்ரோலில்..