அவல் வடை


என்னென்ன தேவை?


அவல் - 1/2 கிலோ


தயிர் - ஒரு கப்


சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்


துருவிய இஞ்சி - ஒரு ஸ்பூன்


உப்பு -தேவையான அளவு


ரவை - அரை கப்


கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை


இது எண்ணெய் இல்லா வடை விரும்புபவர்களுக்கு பிடிக்கும். ஊற வைத்து அவல் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு ரவை, துருவிய இஞ்சி, உப்பு, தயிர் எல்லாவற்றையும் சேர்க்கவும். மிக்ஸி கொரைகொரைப்பாக அரைத்தெடுக்கவும். இதில் சில்லி ப்ளேக்ஸ், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையில் வடை போல தட்டி இட்லி பானையில் வேக வைத்து எடுத்தால் சுவையான அவல் வடை ரெடி.


சட்னி:


இதற்கு கொத்தமல்லி சட்னி, தேங்காய சட்னி செய்து சாப்பிடலாம்.


பட்டாணி அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: 


அவல் - 1 கப்


வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது )


வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்


வேகவைத்த உருளைக் கிழங்கு - 2 


கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு


தாளிக்க:


கடுகு - 1/2 டீஸ்பூன்


பச்சை மிளகாய் - 4


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


எண்ணெய் - ஒரு டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


எலுமிச்சை சாறு - தேவையான அளவு (எலுமிச்சை பழம் தேவையில்லையெனில் சேர்க்க வேண்டாம்.)




செய்முறை: 



  • நன்றாக சுத்தம் செய்த அவல் 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். இதை பாலிலும் ஊற வைக்கலாம். சுவையாக இருக்கும்.

  • சிறிது நேரம் கழித்து அவலை வடிக்கட்டவும்.

  • கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். 

  • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்,  அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  • 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். 

  • பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும். 

  • சுவை கொத்தமல்லி, பட்டாணி அவல் ரெடி!


ஒரிஜினல் அவல் உப்புமாவிற்கு  அவல் மேலே குறிப்பிட்ட பொருட்களுடன், வறுத்த நிலக்கடலை சேர்த்து செய்தால் அவ்வளவுதான்.


இந்த ரெசிபியில் சிகப்பு அவல் பயன்படுத்தி செய்யலாம். சிகப்பு அவலை பாலில் ஊறவைத்து கார்ன் ஃப்ளேக்ஸ் போல செய்து சாப்பிடலாம். அதோடு, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்டவற்றை சேர்த்தும் வோல்சம் மீல் பவுல் போல சாப்பிடலாம். சர்க்கரையை தவிர்க்கவும். தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்.