வெயில் காலத்தையும் மாம்பழங்களையும் பிரிக்க முடியாது. நாம் அளவு கடந்து ருசிக்கும் இந்த பழங்கள் நமக்கு அரிதான பலன்களையும் தருகின்றன. ஆகையால், பழச்சாறிலிருந்து குழம்பு வரை இந்த பழங்களைப் பயன்படுத்தலாம். ருசி மட்டும் அல்லாது தேவையான சத்துகளையும் அள்ளித் தருகின்றன. அதனால் தான், இவை காலம் காலமாக நமது வீடுகளில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன.


புற்று நோயில் இருந்து எதிர்ப்புத் திறன்


மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் அதிகம் இருக்கிறது. இது ஒரு ஆண்டி-ஆக்சிடன்ட். இது செல்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். ஆகையால், புற்றுநோய் ரிஸ்கையும் மாம்பழங்கள் குறைக்கிறது.


எடை இழப்பு


சரியான அளவுகளில் மாம்பழங்களை உண்பது எடை இழப்பையும் உறுதி செய்யும். இதன் தோலில் இருக்கும் ஃபைட்டோ கெமிக்கல்கள் இயற்கையான கொழுப்பு கரைப்பானாக வேலை செய்கிறது. இதில் நார்ச் சத்து அதிகம் இருக்கிறது. ஆகையால், நீண்ட நேரம் வயிறை நிரப்புவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..



ஆரோக்கியமான தோல்


தோல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான வைட்டமின் ஏ மற்றும் சி இதில் நிரம்பி இருக்கிறது. மேலும், வெயில் காலங்களில் தோல் அதிகம் சுரக்கும் எண்ணெய் சுரப்பையும் இது கட்டுக்குள் வைக்கிறது.


எதிர்ப்புத் திறன் உறுதி


மாம்பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி, காப்பர், ஃபோலேட், வைட்டமின் ஈ, பிற வைட்டமின் பி சத்துகள் இருக்கின்றன. மேலும், ஆண்டி-ஆக்சிடண்டுகளும் இருக்கின்றன. இவை நமது ஒட்டுமொத்த உடலின் எதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும்.


இதய ஆரோக்கியம்


இதில் நார்ச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. மேலும், வைட்டமின் குவியல்கள் இருக்கின்றன. இவை ரத்தக் குழாய்களை உறுதிபடுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இதய நோய்களுக்கான ரிஸ்கைக் குறைக்கின்றன.


 


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்