உப்பில்லாத உணவை யாராலும் தொட முடியாது. ஆனால், எவ்வளவு உப்பு சரியான அளவு? அல்லது, உப்பு எதுவும் இல்லாமல் உண்பது நல்லதா?


அடிப்படையில், உப்பு உணவுகளைக் கெட்டுப் போகாமல் காப்பாற்றுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. நமது உணவின் சுவையை கூட்டிக் கொடுப்பதற்கு உப்பு தேவை என்றாலும் ஒரு அளவுக்கு மீறினால் அது நமது உடல்நலனை நிச்சயம் பாதிக்கும்.


உப்பு நமது உணவில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும். ஈரப்பதம் இல்லாததால் உணவில் பாக்டீரியா வளர்ச்சி தடைபடுகிறது. அதனால் தான் உப்பு நீண்ட நாட்களுக்கு உணவை சேமிக்கப் பயன்படுகிறது.



உப்பு எதிலிருந்து உருவாகிறது? அடிப்படையில் இது ஒரு ரசாயனம். சோடியம் மற்றும் க்ளோரைட் இணைந்து உப்பு கிடைக்கிறது. இதில், சோடியம் பயன்பாட்டை நாம் கவனிக்க வேண்டும். அதிக அளவில் உப்பை எடுத்துக்கொள்ளும் போது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இந்த அதிக ரத்த அழுத்தம் இதயத்தைப் பலவீனமாக்குகிறது. இதய நோய்களுக்கான வாசலைத் திறந்து விடுகிறது. ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. மேலும், ரத்த அழுத்தம் அதிகரிப்பது கிட்னி செயல்பாட்டையும் பாதிக்கும். கடந்த வருடங்களில், இதய நோய்கள், கிட்னி செயல்பாட்டு இழப்பு மற்றும் ஸ்ட்ரோக் பலரது உயிர்களையும் பறித்திருக்கிறது.


ஆகையால், நமது உடலில் சோடியம் அளவைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுடையவர்களுடைய உடல் சோடியத்திற்கு அதிக ரிஸ்கைக் கொண்டிருக்கிறது. ஆதலால், வயதானவர்களின் உணவில் உப்பின் அளவு குறைக்கப்பட வேண்டும்.


எப்படி உப்பின் பயன்பாட்டைக் குறைப்பது?


1, டின்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.



  1. காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

  2. உடற்பயிற்சி அவசியம்.

  3. புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கத்தைக் குறைப்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.


  4. Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


    இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


    Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


    Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


    முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


    Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


    மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


    ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


    பேஸ்புக் பக்கத்தில் தொடர


    ட்விட்டர் பக்கத்தில் தொடர


     


    யூட்யூபில் வீடியோக்களை காண  


    சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


    மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்