ஃப்ரைட் ரைஸ் எல்லோருக்கும் பிடித்த ரெசிபி. தற்போது நாம் மலேசியன் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்யலாம் என்று தான் பார்க்கப் போகின்றோம். 

தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது

துருவிய தேங்காய் - 3 துண்டு

சிவப்பு மிளகாய் - 8

பூண்டு - தேவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

 ஃப்ரைட் ரைஸ்

வேகவைத்த பாஸ்மதி ரைஸ்

எள்ளு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

மஷ்ரூம் - 1 கிண்ணம் நறுக்கியது

வேகவைத்த பச்சை பட்டாணி - 1/2 கப்

சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

வினிகர் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

வெங்காயத்தாள் நறுக்கியது

பச்சை குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது

மஞ்சள் குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது

சிவப்பு குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது

உப்பு - 1 தேக்கரண்டி 

மிளகு தூள் - 1 தேக்கரண்டி 

வேகவைத்த சோளம் - 1/2 கப்

 செய்முறை

இஞ்சி, பூண்டு, துருவிய தேங்காய், ஊறவைத்த சிவப்பு மிளகாய், தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். 

நறுக்கிய காளான், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு வேகவைத்த சோளம், பச்சை பட்டாணி கலந்துவிட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்பு சோயா சாஸ், வினிகர், சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து விட்டு, வேகவைத்த சாதம் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான மலேசியன் ஃப்ரைட் ரைஸ் தயார். 

மேலும் படிக்க 

Vijayakanth Death: 'சிறந்த கலைஞர், உயர்ந்த அரசியல்வாதியை தாண்டி நல்ல மனிதர்' - விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அரசியல் பிரமுகர்கள்..

Vijayakanth Death:“ஒரு பெரிய சகாப்தம் முடிஞ்சு போச்சு” - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வாகை சந்திரசேகர், ராதாரவி

Vijayakanth Funeral LIVE: விடைபெறும் விஜயகாந்த்.. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு நோக்கி தொடங்கியது இறுதி ஊர்வலம்