உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.

Continues below advertisement

ஆனால் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது பூத உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை தீவித்திடலில் மாற்றப்பட்டது. அங்கேயும் மக்கள் கூட்டம் கட்டுகடங்காமல் வந்த வண்ணம் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். நேரில் வர முடியாத  பிரபலங்கள் சமூக வலைத்தளத்திலும் வீடியோ மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் பிரபலங்கள் அஞ்சலி: 

இந்நிலையில் இன்று காலை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமூகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின், நடிகர் சங்க கட்டடத்திற்கு மறைந்த கேட்பன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Continues below advertisement

சட்டமன்ற உறுப்பினர் ஓபிஎஸ் அஞ்சலி: 

இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் பேசிய அவர், “ தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் வருத்தமளிக்கும் செய்தியாகும். அன்பாகவும், நேசமாகவும், பாசமாகவும் பழகக்கூடியவர் விஜயகாந்த். சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர், நடிகர் சங்கம் தலைவராக இருந்த போது அந்த சங்கம் இடார்பாடுகளில் இருக்கும் போது மீட்டு எடுத்தவர். அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். தனிப்பட்ட முறையில் இது மிகப்பெரிய இழப்பாகும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக வெற்றிபெற கூட்டணி அமைத்து உறுதுணையாக இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அஞ்சலி: 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சென்னை தீவுத்திடலில் இருக்கும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தனக்கென்று இரு ரசிகர் பட்டாலத்தை ஏற்படுத்தியவர். அதன் மூலம் உயர்ந்த பணிகளை செய்து படிப்படியாக தனது நடிப்பாலும் கடின உழைப்பாலும் உயர்ந்து இந்த கட்சியை தொடங்கி, கிரமம் முதல் நகரம் வரை கட்சியை பலப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் என்ற ஸ்தானத்தை பெற்றவர் விஜயகாந்த். ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தை தனது இறுதி மூச்சு வரை செயல்பட்டவர். அவர் தலைமையில், தமிழ் மாநில காங்கிரஸ் செயல்பட்டதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் திருமணம் ஜி.கே மூப்பனார் தலைமையில் நடந்ததை இங்கு நினைவுகூறுகிறேன். சிறந்த கலைஞர், உயர்ந்த அரசியல்வாதியை தாண்டி நல்ல மனிதர், மனிதநேயர் இன்று நம்மை விட்டு விடைப்பெற்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.