அசைவத்தை கொண்டு கபாப் ரெசிபி செய்வது போன்று, காய்கறிகளிலும் கபாப் செய்யலாம். இந்த கபாப் அசைவத்திற்கு நிகரான சுவையில் இருக்கும். தற்போது நாம் சுரைக்காயை வைத்து எப்படி சுவையான கபாப் ரெசிபி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இதை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த சுரைக்காய் கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


சுரைக்காய் -1 கப்  துருவியது , வெங்காயம்-1, அரிசி மாவு - 3 தேக்கரண்டி , சோள மாவு - 2 தேக்கரண்டி , ப்ரட் க்ரம்ஸ் - 3 தேக்கரண்டி, மிளகாய் தூள்-1 தேக்கரண்டி,  சோம்புதூள்-1 தேக்கரண்டி, சோயாசாஸ் - 1/4 தேக்கரண்டி ,மல்லிதழை சிறிதளவு, கறிவேப்பிலை- 1 கொத்து ,உப்பு தேவையான அளவு , எண்ணெய் பொரிப்பதற்கு  தேவையான அளவு.


செய்முறை


முதலில் சுரைக்காயை தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ளவும்.


வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை இவைகளை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 


துருவிய சுரைக்காயை கடாயில் சேர்த்து அதை தண்ணீர் சுண்ட வதக்கி கொள்ள வேண்டும்.


சுரைக்காய் வதங்கியதும், அதே கடாயில் நறுக்கிய வெங்காயம், மல்லி, கறிவேப்பிலையை சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ள வேண்டும்.


ஒரு பாத்திரத்தில் வதக்கிய பொருட்களுடன், சோள மாவு, அரிசி மாவு, மிளகு தூள், சோம்பு தூள், சோயா சாஸ், ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.


வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி அதில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். 


விரும்பினால் நீளவாக்கில் உருவாக்கி பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.  இதை கெட்சப்புடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.


மேலும் படிக்க 


Vijayakanth: விசுவாசத்தின் மறுபெயரா மன்சூர்! விஜயகாந்த் இறந்த பின்பும் அவர் காலையே சுற்றி வந்த பாசக்காரன்!


Ayodhya: அயோத்தியில் ரூ.1450 கோடி செலவில் நவீன வசதிகளுடன் விமான நிலையம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி


https://tamil.abplive.com/news/india/pm-modi-to-inaugurate-ayodhya-airport-revamped-railway-station-amrit-bharat-trains-today-158689/amp