பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கலுடன் சேர்ந்து கட்டாயம் பாயசமும் இடம்பெரும் அல்லவா? பாயாசத்தில், பால் பாயாசம், அடை பாயாசம், பாசிபருப்பு பாயாசம் என பல வகைகள் உள்ளன. இருந்த போதிலும் தாமரை விதை பாயாசம் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.


இந்த பாயாசத்தை குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விட முடியும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க தாமரை விதை பாயாசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


பால் - 3 கப்,  தாமரை விதை - 1 கப் , சர்க்கரை - 1 1/2 கப், ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை,  பாதாம் - 5-6 (பொடித்தது),  முந்திரி - 5-6 (பொடித்தது),  குங்குமப்பூ - 1 சிட்டிகை,  நெய் - 1 டீஸ்பூன். 


செய்முறை



முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து காய்ந்ததும், தாமரை விதையை சேர்த்து  3லிருந்து 4 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து, ஒருதட்டில் ஆறவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.


பின்னர் சிறிது பாலில் குங்குமப்பூவை சேர்த்து, 5 நிமிடம்  ஊற வைக்க வேண்டும். மீதம் இருக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பால் சுண்டி கெட்டியாகும் போது, அதில் பொடி செய்து வைத்துள்ள தாமரை விதையை சேர்த்து, 5 நிமிடம் கிளறி, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும், குங்குமப்பூ பாலை ஊற்றி நன்கு கிளறி விட்டு,  இறக்க வேண்டும். இப்போது அதில் பாதாம், முந்திரி, ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை தூவி விட்டால் சுவையான தாமரை விதை பாயாசம் தயார். 


தாமரை விதையின் நன்மைகள் 


இவற்றில் செல் முதிர்ச்சி அடைவதைத் தாமதப்படுத்தும் என்சைம்கள் உள்ளன. மேலும், சேதமடைந்த புரதங்களுக்கு இந்த என்சைம்களை அளித்து உதவவும் செய்கின்றன. இதன் காரணமாக, பல அழகு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களில் தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்களைச் சேர்ப்பதாக கூறப்படுகிறது.


இவை மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்த உதவும் என சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க


Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க...


Karkandu Pongal: பொங்கல் ஸ்பெஷல்.. கற்கண்டு பொங்கல் ரெசிபி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...


Karkandu Sadham: பொங்கல் ஸ்பெஷல்.. தித்திப்பான கற்கண்டு சாதம் டக்குன்னு செஞ்சு முடிக்கலாம்.. ரெசிப்பி இதோ