Cashew Chutney: முந்திரி சட்னி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை தெரிஞ்சுகோங்க மக்களே..

Cashew Nut Chutney : சுவையான முந்திரி பருப்பு சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Continues below advertisement

முந்திரி பருப்பு நம் அனைவருக்குமே பிடிக்கும் . இதை வெறுமனே சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். குருமா உள்ளிட்ட உணவுகளின் சுவையை கூட்ட முந்திரி சேர்க்கப்படுகிறது. தற்போது நாம் முந்திரி பருப்பை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்றுதான் பார்க்க போகின்றோம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

முந்திரி -1 கப் 
வரமிளகாய்- 3
சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
புளி- சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ள வேண்டும்.
 
இந்த கலவை ஆறியதும் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அத்துடன் வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்தால், முந்திரி சட்னி தயார். இந்த சட்னி இட்லி தோசை உடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 

முந்திரி பருப்பின் பயன்கள் 

முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரால் அதிகளவு உள்ளது. மேலும் உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடிய கெட்ட கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய நல்ல கொலஸ்டிராலை அதிரிக்க முந்திரி பருப்பு உதவும் என சொல்லப்படுகிறது. 

முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஜீரண சக்தியை மேம்படுத்தவும் இது உதவும் என கூறப்படுகிறது. முந்திரி பருப்பில் கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துகளின் அளவு உடலில் அதிகரிக்கும். இந்த சத்துக்கள்தான் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் அவசியமானதாக உள்ளது. மேக்னீசியம், எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிவதால், எலும்புகளை வலிமையாக்க இது உதவும். 

தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமானோர் நரைமுடி பிரச்சனையால் அவதியடைகின்றனர். இந்த பிரச்சனைக்கு முந்திரி பருப்பு தீர்வளிக்கும் என சொல்லப்படுகிறது.  ஏனெனில் முந்திரி பருப்பில் உள்ள காப்பர் சத்து, முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து முடி சீக்கிரமே நரைப்பதை தடுக்கும் என கூறப்படுகிறது. 

சிறுநீரகம் பாதிக்கபட்டால் அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது தடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க 

Karkandu Pongal: பொங்கல் ஸ்பெஷல்.. கற்கண்டு பொங்கல் ரெசிபி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...

Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola