Karkandu Pongal : தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இது பாரம்பரிய பண்டிகையும் கூட. பொங்கல் பண்டிகையன்று பாரம்பரிய உணவுகளை செய்வது பழக்கம். ஆனாலும் இந்த தினத்தில் பல வகை உணவுகளை செய்தாலும், பொங்கல் தான் ஸ்பெஷல். எனவே இன்று நாம் கற்கண்டு பொங்கல் எப்படி செய்வது? என்று தான் பார்க்க போகின்றோம். இவை பால் மற்றும் நெய் சேர்த்து செய்வதால் இதன் சுவை அசத்தலாக இருக்கும். 


தேவையான பொருட்கள் 


கற்கண்டு -2 கப்


பச்சை அரிசி -1 கப்


பால்- 2 கப்


பருப்பு -1 ஸ்பூன்


குங்குமப்பூ


முந்திரிப் பருப்பு-10


ஏலக்காய்த் தூள்-2 சிட்டிகை


நெய்-3 ஸ்பூன்


செய்முறை


முதலில் பாலை காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு அதில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.


ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பு சேர்த்து நன்றாக கழுவி, அதில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி விட வேண்டும். பிரஷர் அடங்கியதும், குக்கரை திறந்து சாதத்தை மசித்துக் கொள்ள வேண்டும்.


இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து உருகியதும், கற்கண்டு மற்றும் பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து, மீதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள், அதாவது கற்கண்டு உருகும் வரை கலந்து விட வேண்டும்.


இந்த கலவையை சாதம் மற்றும் பருப்பு வேகவைத்த குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இதனுடன் 2 சிட்டிகை ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.


அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிதளவு நெய் சேர்த்து உருகியதும்,  முந்திரி சேர்த்து வறுத்துக் அதை, குக்கரில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.


அவ்வளவுதான் சுவையான கற்கண்டு பொங்கல் தயார்.


மேலும் படிக்க 


Thinai Pongal: சத்தான சிறுதானிய காலை உணவு... தினை பொங்கல் செய்முறை இதோ..


Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!


Tomato Kurma: தக்காளி குருமா ஸ்பெஷலா செய்யணுமா? சுவை அசத்தலா இருக்கும்.. இதுதான் ரெசிப்பி..