Pongal Recipe Special Karkandu Sadham : பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. பொங்கலுக்கு பாரம்பரிய உணவுகளை தயாரிப்பது வழக்கம்.  பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரை பொங்கலுக்கு அடுத்தபடியாக கற்கண்டு சாதத்தை பெரும்பாலானோர் விரும்பி செய்கின்றனர். சிலர் இதை எப்படி செய்வதென்று தெரியாததால் இதை செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இப்போது நாம் கற்கண்டு சாதத்தை எப்படி எளிமையாகவும், சுவையாகவும் செய்வது என்றுதான் பார்க்க போகின்றோம். இந்த சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். 


தேவையான பொருட்கள் 


1/2 கப் பச்சரிசி

1 கப்  காய்ச்சிய பால் + 1/4 கப் பால்

3/4 கப் கற்கண்டு

2 டேபிள்ஸ்பூன் நெய்

சிறிது முந்திரி, திராட்சை

சிறிது ஏலக்காய் தூள்

அலங்கரிக்க விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ

செய்முறை


அரிசியை இரண்டு முறை நன்றாகக் கழுவி, 20 நிமிடம் ஊறவைக்க இதை குக்கரில் சேர்க்க வேண்டும். பிறகு குக்கரில் 1 கப் பால்,  கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 


15 நிமிடத்திற்கு பின் குக்கரை திறந்து, சாதத்தை கரண்டியால் மெதுவாக மசித்து விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கற்கண்டு சேர்த்து, தண்ணீர் விட்டு கற்கண்டு கரையும் வரை கொதிக்கவைக்க வேண்டும். மசித்த சாதத்தில், மீதம் இருக்கும் கால் கப்  பாலை ஊற்றி நன்றாக கலந்து, வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பின் இதில் கற்கண்டு கரைந்த தண்ணீரை நன்றாக கலந்து, குறைந்த தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.


தற்போது, கற்கண்டு நீரும் அரிசியும் ஒன்றோடு ஒன்று கலந்து வரும். அப்போது அடுப்பை அணைத்து, வறுத்து வைத்திருக்கும் திராட்சை, முந்திரி,ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்துவிட வேண்டும். 


அவ்வளவுதான் தித்திப்பான கற்கண்டு சாதம் தயார். 


மேலும் படிக்க 


Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!


Aloo Palak Pakoda: மொறு மொறுன்னு சுவையான பாலக்கீரை பகோடா ரெசிபி - ட்ரை பண்ணுங்க!


Millet Pumpkin Dosa : உடல் எடை குறைக்கணுமா? சாமை - பூசணிக்காய் தோசை சாப்பிடுங்க.. செய்முறை இதோ...