உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள கருப்பு கவுனி அரிசியில் எப்படி சுவையான இனிப்பு பொங்கல் செய்யலாம் என்பது குறித்துப் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


கருப்பு கவுனி - 1 கப் ,


பாசிப்பருப்பு - கால் கப்


வெல்லம் - ஒன்றரை கப்


பால் - 2 கப்


உலர் திராட்சை - 30


முந்திரி பருப்பு - 20 -25


தேங்காய் - கால் மூடி


ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்


நெய் - 100 மில்லி


பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை


செய்முறை


கருப்பு கவுனி அரிசி வேக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால்,  2-3 மணி நேரத்திற்கு முன்பாகவே அலசி விட்டு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். 


பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்து அதை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் பாலுடன் 5 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நீர் கொதித்ததும், அதில் ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்க்க வேண்டும். அரிசி வேக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். (குக்கராக இருந்தால் குறைந்தது 10 விசில் விட்டு இறக்கலாம்).

அரிசி 65 சதவீதம் வெந்த பிறகு பருப்பை சேர்த்தால் போதும். இல்லையென்றால் பருப்பு முழுமையாக குழந்து விடும். 


அரிசி மற்றும் பருப்பு நன்றாக வெந்ததும், அதில் வெல்லப்பாகு அல்லது துருவிய வெல்லத்தைச் சேர்த்து கிளற வேண்டும்.


வெல்லம் அரிசியுடன் சேர்ந்து நன்றாக குழைந்து வெந்து வர வேண்டும். 

தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே நெய்யில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி, பருப்பு நன்கு வெந்ததும், அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும்.

பிறகு அதில் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் முந்திரி, உலர் திராட்சையைச் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு அடுப்பை அணைத்து விட்டு, மீதமுள்ள எல்லா நெய்யையும் சேர்த்து விடுங்கள். கடைசியாக ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கருப்பு கவுனி அரிசி பொங்கல் தயார். இதை சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க 


Coconut Sooji Cake: புது வருஷத்துல கேக் செய்ய முடிவு பண்ணிட்டீங்களா? தேங்காயும், ரவையும் போதும்.. சிம்பிளா செய்யலாம்..


Karkandu Pongal: பொங்கல் ஸ்பெஷல்.. கற்கண்டு பொங்கல் ரெசிபி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...


Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!