தேவையான பொருட்கள்
அரிசி – 21/2 கப், புளி – எலுமிச்சை பழ அளவு, வர மிளகாய் – 10, பூண்டு – 10 பல், தனியா – 11/2 ஸ்பூன், வெள்ளை எள் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 100 கிராம், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அரிசியை கழுவி வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். புளியை 10லிருந்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் வெந்தயம் மற்றும் மிளகு சேர்த்து சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றுடன் தனியா, எள், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வறுத்துக்கொள்ளவும். இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் வேர்க்கடலை, கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பின்பு ஊற வைத்த புளியை கரைத்து கரைசலை மட்டும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசி வேக தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். (2 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் போதுமானது)
இப்போது தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் கொதி வந்தவுடன் அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி ப்ரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து ஒரு கரண்டியால் சாதத்தை மிக்ஸ் செய்து விட்டால் சுவையான புளிசாதம் தயார். இதை உங்களுக்குப் பிடித்த சைடிஷ் உடன் வைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே சாப்பிடலாம்.
மேலும் படிக்க
Raddish Pachadi: முள்ளங்கி பச்சடி! இப்படி செய்தால் கூட ஒரு கரண்டி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்டுவீங்க!
Bread Chilli:காரசாரமான சில்லி பிரெட்... இப்படி செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும்..