காதலர் தின மாதம். காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்களிடம் அன்பை வெளிப்படுத்த அவர்களுக்கு பரிசளித்து சர்ப்ரைஸ் வழங்கலாம். என்னென்ன பரிசுப் பொருட்களை வழங்கலாம் என திட்டமிடும் இணையர்களுக்கான டிப்ஸ் இதோ!


காதல் ஜோடிகள், இணையர் மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பகிர்ந்துகொள்ள திட்டம் இருக்கலாம்.பலருக்கு என்ன பரிசு கொடுப்பது என்பதில் பெரும் சந்தேகம் இருக்கும். ஒருவருக்கு பிடித்ததை கொடுப்பதா? அவர்களுக்கு அதிகம் பயன்படுவதை கொடுப்பதா? என்ன பரிசளித்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் செய்யலாம்? பொதுவாக பரிசுகளை பரிந்துரைப்பது என்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் பரிசை பெறப்போகும் நபரைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும் அல்லவா..? அதற்கேற்றவகையில், பரிசுப் பொருளை தெரிவு செய்யலாம் என்று முடிவெடுங்கள்.


பிரத்யேக பரிசு


உங்கள் காதலருக்கு என்ன பிடிக்குமோ அதை பரிசளிக்க திட்டமிடுங்கள். அவர்கள் ரொம்ப நாளாக வாங்க வேண்டுமென நினைத்த தங்க நகைகள், எலக்ட்ரானிக் பொருள், ஹெட்செட், வாட்ஸ், ப்ளேஸ்டேஷன் உள்ளிட்டவற்றை தெரிவு செய்து பரிசளித்து அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தலாம். 


சுற்றுலா


உள்ளூரிலேயே, வெளியூரிலோ இணையர் நீண்ட நாட்களாக காண வேண்டும் என்ற நினைத்த இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடலாம். பணியிலிருந்து விடுப்பு எடுக்க முடியுமெனில் அதற்கேற்றவாறு திட்டமிடலாம்.


ஸ்சென்டட் மெழுகுவர்த்தி


இந்த வகை நபர்களுக்கு கிப்ட் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் அவர்கள் டேஸ்டிற்கு தேர்வு செய்வது மட்டுமே ஒரே கடினமான வேலை. விளக்கு, கடிகாரம், டேபிள் மேல் வைக்கும் அழகு பொருட்கள், ஜன்னல் திரை, ஸ்சென்டட் மெழுகுவர்த்தி என பல விஷயங்கள் உள்ளன. அவற்றை பரிசளிக்கலாம்.


ஆன்டிக் லவ்வர்ஸ்


ஆன்டிக் லவ்வர்ஸ் என்று கூறப்படக்கூடிய இவர்களுக்கு பழைய டிசைனில் செய்யப்பட்ட கடிகாரங்கள், விளக்குகள், வீட்டு அலங்கார பொருட்கள் நிறைய உள்ளன. வெள்ளை நிற உட்புற சுவர் உள்ள வீட்டில் இருப்பவர் என்றால் பெரும்பாலும் டார்க் பிரவுன் நிறத்தில் உள்ள பொருட்கள், மற்றும் மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கித் தரலாம். 



  • ஓவியங்கள் பிடிக்குமெனில் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஓவியர்களின் படங்களை பரிசளிக்கலாம்.

  • காஃபி பிரியர்கள் என்றால் ஃபேளவர்ட் காபி வகைகளை பரிசளிக்கலாம். டீ பிரியர்கள் என்றாலும் அதே. ஹெர்பல் டீ, வொயிட் டீ உள்ளிட்டவற்றை பரிசளிக்கலாம். 

  • இணையருடன் சேர்ந்து திரைப்படங்களுக்கு செல்லலாம். இல்லையெனில் வீட்டிலேயே ’மூவி டேட்’ திட்டமிடலாம். 

  • இருவருக்கும் பிடித்த உணவகங்கள் அல்லது வெகு நாட்களாக சேர்ந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையோடு இருந்த உணவுகங்களுக்கு சென்று கொண்டாடலாம். 

  • பூங்கொத்து உடன் கடிதம் எழுதி உங்களின் காதலை வெளிப்படுத்தலாம்.

  • உங்கள் இணை உடல்நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு ஜிம், விளையாட்டு கோர்ட் ஏதாவது ஒன்றில் உறுப்பினர் சேர சொல்லலாம். 

  • சினிமா டூடுல் டிசைன் செய்யப்பட்ட சுவர் கடிகாரங்கள், காபி மக், போஸ்டர்கள், தலையணை, சுவர் ஸ்டிக்கர்கள் வாங்கி தரலாம்.

  • ஓ.டி.டி. சப்ஸ்க்ரிப்சன் பரிசு கொடுக்கலாம்.

  • பூச்செடிகள் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் எனில் அவர்களது தோட்டத்தில் இல்லாத பூச்செடிகளை பரிசளிக்கலாம். 

  • காதல் இணையருக்கு பயன்பட வேண்டும் என்பது மாதிரியான பரிசுகளை மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அவங்க புதிய விசயங்களை முயற்சி செய்து பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் என்றால் அதற்கேற்றார்போலவும் பரிசளிக்கலாம்.

  • புத்தகங்கள், ஸ்டேஸ்னரி பொருட்கள் மீது விருப்பம் அதிகம் என்றால் அதில் தனித்துவமானவற்றை பரிசாக அளிக்கலாம்.